பக்கம்:பாலைச்செல்வி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புலவர் கா. கோவிந்தன் தாழ்கதுப்பு அணிகுவர் காதலர் மற்று.அவர் சூழ்வதை எவன்கொல்? அறியேன்! என்னும்; 'முள்உறழ்முளை எயிற்று அமிழ்து ஊறும்தி நீரைக் கள்ளினும் மகிழ்செயும் எனஉரைத்தும் அமையார் என் ஒள்இழை திருத்துவர் காதலர்; மற்று.அவர் 15 உள்ளுவது எவன்கொல்? அறியேன்! என்னும்; 'நுண்எழில் மாமைச் சுணங்கு அணிஆகம் தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார்என் ஒள்நுதல் நீவுவர் காதலர் மற்று.அவர் எண்ணுவது எவன்கொல்? அறியேன்! என்னும்; 20 எனவாங்கு, x 'கழிபெரும் நல்கல் ஒன்று உடைத்து என என்தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒருநாள்நீர் பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? ஒழிகினிப் பெரும! நின்பொருட்பிணிச் செலவே.” 25 பொருள்வயின் பிரியக் கருதிய தலைவ்னுக்குத் தோழி, தலைவி, அவன் செல்வதை அறிந்தவாறும், அவள் ஆற்றாமையும் உணர்த்திச் செலவு ஒழிவாயாக என வேண்டிக் கொண்டது இது. 1. முன்பு-வலியை வல்லென்ற-திண்ணிய, 2. சுரி வளர் பித்தை-சுருண்டு வளர்ந்த மயிர், 3. அற்றம்-ஏற்ற காலம்; அல்கும்-காத்திருக்கும்;4, வம்பலர்-வழியில் புதியராக வருவார்; 5. காண்மார்-காணுதற் பொருட்டு 6. புள்-பறவை; புலம்பு-துன்பம்; ஆர் இடை-கடத்தற்கு அரிய வழி; 8. உள்ளினிர்- எண்ணங் கொண்டுள்ளாய்; 9. காழ்-முத்துமாலை; மீவரும்-கிடந்து அசையும்; 10. முயங்கியும்-தழுவியும்; 11. கதுப்பு-தலை மயிர் அணிகுவர்செப்பம் செய்து அழகு படுத்துவர்; 12. சூழ்வது- எண்ணுவது; 13. உறழ்-ஒத்த (வடிவால் அதனை வென்ற); எயிறு-பற்கள்; 15.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/36&oldid=822287" இலிருந்து மீள்விக்கப்பட்டது