பக்கம்:பாலைச்செல்வி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புலவர் கா. கோவிந்தன் மீண்டும் விழாப் பெற்று, அவ் வனப்பினைப் பெறுதலும் உண்டு. நல்லரசிழந்து தம் நலன் இழந்த நாடுகள், பின்னர் நல்லரசு பெற்று, இழந்த தம் நலனை மீட்டுப் பெறலும் உண்டு. தண்ணிர் வற்றிய குளத்தில் தழைத்த தாமரை மலர், ஓர் இராப் பொழுதளவும் வாடாமல், வனப் பிழக்காமல் விளங்குவதும் உண்டு. ஆனால், நீ பிரிந்து சென்றுவிடின், நின் அன்பினைப் பெற மாட்டாது வருந்தும் நின் மனைவியின் உயிர், நீ பிரிந்த அன்றே, அவள் உடலை விட்டுப் பிரிந்து போய்விடுமாதலின், நின் அருளை இழந்தமையால் இழந்த அவள் வனப்பையும், வாழ்வையும் மீண்டும் பெறுதல் இயலாது. இதை நீ உணர்தல் வேண்டும். R. "இதை உணராது, இளமைக் காலத்தில், இவளைப் பிரியாதிருத்தலால் பெறும் இன்பத்தினும், பிரிந்து போய்த், தேடிப்பெறும் பொருளே சிறந்தது என நீ எண்ணி விடுவையெனின், அந்நிலையில் யாங்கள் செயலாற்று வருந்துவதல்லது, செய்யக் கூடியது ஏதும் இல்லை. வாணிபம் கருதி வங்கம் ஏறிச் செல்வார், கடல் இடையே, கொடிய பேய்க் காற்றுத் தோன்றித், தம் கலத்தை நிலை குலைத்து அலைக்கழித்த வழி, அம்மக்கள், தாம் மேற் கொண்டு வந்த முயற்சி முற்றுப்பெறாது முடிந்துபோவது கண்டு, அக்காற்று ஈர்த்துச் செல்லும் திசைகளிலெல்லாம் ஒடி ஒடி உருக்குலையும் அக்கலத்தில் செயலற்றுக் \ கிடப்பதல்லது, அந்நிலையில் செய்யக் கூடியது ஏதும் இல்லை என்பதைக், கடல் வாணிபம் கருதிக் கலம் ஊர்ந்து சென்று பழகிய நீ அறிந்திருப்பாயன்றோ? அதைப் போல், எம் வாழ்க்கைத் தோணியை, நின் பிரிவெனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/42&oldid=822294" இலிருந்து மீள்விக்கப்பட்டது