பக்கம்:பாலைச்செல்வி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 39 வனப்பும், வளனும், பண்பும் பாராட்டும் பெற்று விளங்கும் நாடுகள், அவ் அரசர் அறம் திரிந்து, கெடுவழி காட்டும் கொடியோர் நெறிநின்று, குடிபொன்றக் கோல் புரியும் கொடுங்கோலராய் மாறியவிடத்து, நாட்டு மக்கள், கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடே நன்று' எனக் கருதித், தாம் பிறந்து வாழ்ந்த நாட்டை மறந்து, பிற நாடுகட்குச் சென்றுவிடவே, வாழும் மக்களையும், அவரை வாழ வைக்கும் ஆக்களையும் ஆணேறுகளையும் இழந்து, ஆறலைகள் வரும், அவர் கொன்று குவித்த பிணந்தின்று மகிழும் பேயும் திரியும் பாழிடமாய் மாறிவிடும்; நாடு காடாகும் அக்கொடுங் காட்சி நினக்குப் புதிதன்று. 'தண்ணிர் நிறைந்து விளங்கும் தாமரைக் குளமொன்றில், இலைகளும், மலர்களும் எங்கும் நிறையத் தழைத்துப் படர்ந்த தாமரைக் கொடியில் மலர்ந்து, மணந்து, மனம் நிறை மகிழ்ச்சி தந்த மலர்கள், அக் குளத்தில் நீர் வற்றியவுடனே வாடி, வனப்பிழந்து போய்விடும். இக்காட்சியையும் நீ கண்டது உண்டு. "ஊருக்கு அழகளிப்பது விழா நாட்டிற்கு வாழ் வளிப்பது நல்லரசு, தாமரை மலர்க்கு உயிர் அளிப்பது தண்ணிர்; அதைப்போல் நின் காதலிக்கு அழகும், அரிய வாழ்வும், உடற்கு உரம் ஊட்டும் உயிரும் அளிப்பவன் நீ. விழா அற்ற ஊர் வனப்பிழக்கும்; நல்லரசிழந்த நாடு வாழ்விழக்கும்; தண்ணிர் அற்ற தாமரை மலர் உயிர் இழக்கும். அதைப் போல், நின் அருள் இழப்பின், நின் காதலியின் வனப்பு வாடும்; வாழ்வு பாழாகும்; அவள் உயிர் இழப்பள். வாழ்விழந்து வனப்பிழக்கும் ஊர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/41&oldid=822293" இலிருந்து மீள்விக்கப்பட்டது