பக்கம்:பாலைச்செல்வி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 * புலவர் கா. கோவிந்தன் ஒளியேபோல், அவள் உயிர், அவள் உடலை விட்டுப் பிரிந்து விடும். இவ்வுண்மையை உணர்ந்தவள் தோழி. மேலும் அவ்விருவர்தம் நல்வாழ்வில் நாட்டமுடைய அவள், அவர்கள் வாழ்வு வாழ்வற்றுப் போக, அவர்கள் வாழ்வில் அவலம் அடியெடுத்து வைக்கக் காணப்பொறாள். அதனால் பொருளிட்டும் முயற்சி மேற்கொண்டிருந்த அவன்பால் சென்றாள். "அன்ப! கொற்றவன் வெற்றி குறித்தும், அவன் பிறந்த பெருநாள் குறித்தும், அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் கடவுளர் குறித்தும், இளவேனிற் காலத்து இன்பம் குறித்தும், புதுப்புனல் புகுந்து விளையாடல் குறித்தும் விழா மேற்கொள்ளும் பேரூர்களின் அழகு, அவ்விழா நடைபெறும் நாட்களில், விழா முன்னிட்டு நிகழும் ஆடல் பாடல்களால், அழகிய ஒப்பனைகளால், அவற்றைக் கண்டும் கேட்டும் மகிழ வரும் பல நாட்டு மக்கள் வெள்ளத்தால், என்றும் எங்கும் எழும் பல்வேறு பேரொலிகளால் பன்மடங்காகித் தோன்றும். அத்தகைய பேரூர்கள், ஆங்கு விழாத் தொடங்கி நிகழ்ந்து முடிந்து போயிற்றாக, அது கழிந்த மறுநாள், விழாக் குறித்துச் செய்த சிறப்பெல்லாம் மறைய, விழாக் காண வந்து கூடிய மக்கள் எல்லாம், தத்தம் நாடுகட்குச் சென்றுவிட்டாராக, அந்நிலையில், பண்டு இயல்பாகப் பெற்றிருந்த அழகினை பும் இழந்து பொலிவு குன்றித் தோன்றும். அத்தகு அவல நிலையினை நீயும் கண்டிருப்பை. "ஆளும் அரசர், தாமும் அறம் அறிந்தவராய், அவ்வறமே உரைக்கும் அமைச்சரையும் உடன் கொண்டு நாடாளும் காலத்தில், பசியும் பிணியும் பகையும் அற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/40&oldid=822292" இலிருந்து மீள்விக்கப்பட்டது