பக்கம்:பாலைச்செல்வி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புலவர் கா. கோவிந்தன் அளிக்கும் இவளே சிறந்தவள் என்னும் உண்மை உணர்வு, நின் உள்ளத்தின் ஒருபால் உண்டாமாயின், அந்நிலையில் செல்லும் நின்னை, யான் கூறும் இதுபோலும் உண்மை உரைகள் தடுத்து நிறுத்தாவாயினும், நாள்மீன், கோள்மீன் போலும் நிமித்தங்கள், பொருள் தேடிச் செல்லும் பணிக்குப் பொருந்தாதனவாகி, நின்னைப் போகாவாறு தடுத்து நிறுத்துவனவாக!” என்பன கூறிப், பொருள் கருதிப் பிரியக் கருதிய அவன் எண்ணத்தைக் கெடுத்து, அவர் வாழ்வின் துன்பம் துடைத்துத் துணை புரிந்தாள் தோழி. அதைக் காட்டுவது இச்செய்யுள்: "பாஅல் அம்செவிப் பணைத்தாள், மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறுமயங்கு அருஞ்சுரம், இறந்து நீர்செய்யும் பொருளினும், யாம்.உமக்குச் சிறந்தன மாதல் அறிந்தனி ராயின், 5 நீள்இரும் முந்நீர் வளிகலன் வெளவலின், ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக், கேள்பெருந் தகையோடு எவன்பல மொழிகுவம்? நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே, கல்எனக் கவின்பெற்ற விழவு ஆற்றுப் படுத்தபின் 10 புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு அமைவாளோ? ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல் பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்டு அமைவாளோ? ஒர்.இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ? 15 எனவாங்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/44&oldid=822296" இலிருந்து மீள்விக்கப்பட்டது