பக்கம்:பாலைச்செல்வி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 彎 43 பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு எந்நாளோ நெடுந்தகாய்! நீ செல்வது? அந்நாள்கொண்டு இறக்கும் இவள் அரும்பெறல் உயிரே." தலைவன், பொருள் தேடிப் பிரியக் கருதியுள்ளான் என்பது அறிந்த தோழி, அவன்பால் சென்று, நீ பிரிந்த அன்றே இவள் இறந்து படுவள், ஆகவே, நின்னை நாளும் கோளும் தடுத்து நிறுத்துமாக எனக் கூறிச் செலவழுங்கு வித்தது இது. 1. பால்-பகுதி, 2. மால்-மதமயக்கம்; செவியும் தாளும், மதமும் உடைய யானையொடு, மாநிரையும், மறவரும் மயங்கி என மாற்றுக. 3. தூறு-புதர், அதர்பட்ட-வழியாகிய, 5. முந்நீர்-கடல்; வளி-புயல். 7. ஆள்வினைக்கு அழிந்தோர்-முயற்சி பாழாதல் கண்டு மனம் உடைந்தவர்; 8. கேள்-பெருந்தகை; கணவனாகிய பெரிய தகுதிப்பாடுடையான், எவன்பல மொழிகுவம்-எவ்வாறு பல சொல் வழங்கித் தடுக்க வல்லோம், 9. தகைத்தல்-தடுத்தல்; தகைமே-தகையும் தடுத்தலைச் செய்யும்; நாள் மீனும், கோள்மீனும் என மாற்றுக. நாள்-அசுவனி, பரணி முதலாயின; கோள்-ஞாயிறு திங்கள் முதலாய ஒன்பது; 10. கல்என- கல்லென்னும் பேரொலி எழ, ஆற்றுப்படுத்த பின்-நடந்து கழிந்த பின்னர், 11. புல்லென்ற-பொலிவு இழந்த, புலம்பு-தனிமைத் துன்பம்; 12. அலைபெற்ற-அழிந்த; 13. பைதல்-துன்பம்; ஓர் இராவைகல்-ஓர் இராக் காலத்தில்; 17. பொய்ந்நல்கல் புரிந்தனை- அன்பு காட்டுவான்போல் பொய்யே நடித்தனை, புறந்தரல்- பாதுகாத்தல்; பொய்ந்நல்கல் புரிந்தனையாய், புறந்தரலைக் கைவிட்டுச் செல்வது எந்நாளோ? என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/45&oldid=822297" இலிருந்து மீள்விக்கப்பட்டது