பக்கம்:பாலைச்செல்வி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 துன்பத்தில் இன்பம் கணவன் பொருளிட்டும் முயற்சி மேற்கொண்டு, வெளிநாடு செல்ல விரும்பியுள்ளான் என்பதை உணர்ந்தாள் ஒரு பெண். அவன்பால் பேரன்புடையாள் அவள்; அவன் அன்பே தன்னை வாழ்விக்கும் வழித்துணையாம் எனக் கொண்டவள்; அதனால், அவனை இமைப் பொழுதும் பிரியாது, என்றும் அவன் அண்மையில் இருப்பதையே விரும்புவாள்; ஆனால், அவ்வாறு விரும்பும் அவள், தன் கணவன் தனக்கே உரியவன்; அவனால் பயனுறுவாள் தான் ஒருத்தியேயாதல் வேண்டும்; தன் நலன் ஒன்றே அவன் குறிக்கோளாதல் வேண்டும்; தனக்கு இன்பம் அளிப்பது தவிர அவனுக்கு வேறு வினையில்லை-இருத்தல் கூடாது எனக் கருதும் கருத்திழந்தவளல்லள். மாறாகத் தன் கணவன் உலகெலாம் போற்ற வாழும் உயர்ந்தோனாதல் வேண்டும்; உலகத்தில் துயர் உறுவார் ஒருவரும் இலராதல் வேண்டும் எனக் கருதும் உயர்ந்த உள்ளமும், அவர் துயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/46&oldid=822298" இலிருந்து மீள்விக்கப்பட்டது