பக்கம்:பாலைச்செல்வி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 45 துடைத்து அந்நிலையை அளிக்கவல்ல பெரும்பொருளும், அப் பெரும் பொருளை ஈட்டவல்ல பேராற்றலும் உடையனாதல் வேண்டும்; அதுவே தன்னுடையவும், அவனுடையவும் வாழ்வின் பயனும், குறிக்கோளுமாதல் வேண்டும் எனக் கருதும் பண்புடையாள் அப்பெண். அதனால், தன் கணவன் செல்வம் சேர்க்கும் சிந்தையனாய், அது கிடைக்கும் அயல் நாடு நோக்கிப் போகத் துணிந்ததும், அவன் பிரிவு தன்னைப் பெருந்துயர்க்கு உள்ளாக்கும் என்பதை உணர்ந்தும், அவனைத் தடுத்திலள்; அதற்கு மாறாக, வருவார்க்கு வரையாது வழங்கி வாழும் தம் வளமார் வாழ்விற்கு வேண்டும் பெரும் பொருளை ஈட்டிவர, அவன் பிறநாடு செல்லுதலை விரும்பி வரவேற்றாள். ஆனால், அவ்வாறு விரும்புவாள் அவன் அன்பினையும் இழவாது பெறுதற் பொருட்டுத் தன்னையும் உடன் கொண்டு செல்லுதலை விரும்பினாள். அதனால் புறப்படுதற்காம் முன்னேற் பாடுகளை மேற்கொண்டிருந்த அவன்பால் சென்று, "அன்ப! பொருள் தேடிப் போங்கால், அடியாளையும் உடன் கொண்டு செல்வாயாக!' என வேண்டிக் கொண்டாள். அவள் வேண்டுகோள் அவனுக்கு வியப்பினைத் தந்தது. 'தனித்திருந்து யான் வருந்த, நீ பிரிந்து போவது பொருந்தாது! எனக் கூறித் தடுத்தற்கு மாறாகப், போக உடன்படும் அவள் மனப்பண்பு கண்டு மகிழ்ந்தான். ஆனால், அவள் வேண்டுகோளினை அவ்வாறே ஏற்று, அவளையும் உடன் கொண்டு செல்ல அஞ்சினான். இதனால், அவனுக்கு அவள்மீது அன்பில்லை என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/47&oldid=822299" இலிருந்து மீள்விக்கப்பட்டது