பக்கம்:பாலைச்செல்வி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒ. புலவர் கா. கோவிந்தன் கருத்தன்று. அவளைப் போன்றே, பிரிந்து வாழும் வாழ்வை அவனும் வெறுத்தான்; பிரிவுத் துயரைப் பொறுத்தல் அவனாலும் இயலாது. ஆயினும் பொருளின் இன்றியமையாமை அவனை வெளிநாட்டிற்குத் துரத்திற்று. வெளியூர் செல்லத் துணிந்த அவன், அவளை விடுத்துத் தனித்துச் செல்வதைப் பெரிதும் வருந்தியே மேற்கொண்டான். அங்ங்னமாகவும் அவள், அவன் போக்கினைத் தடுக்காது, அவனோடு உடன்வந்து, அவனுக்கு இடையறா இன்பம் ஊட்ட முன்வருதலை ஏற்றுக் கொள்வதற்கு மாறாக, மறுத்தான். அவள்மீது உள்ள வெறுப்பன்று அதற்குக் காரணம். அவள்மீது கொண்டுள பேரன்பு காரணமாகவே அவள் உடன் வருவதை வெறுத்தான். அவன் செல்லும் நாட்டிற்கு இடையில் உள்ள வழிகள் நனிமிகக் கொடுமை வாய்ந்தவை. ஒருபால் உயர்ந்த மலைகளும், ஒருபால் அடர்ந்த காடுகளும் கிடக்க, இடையே சிறுமலைகளும் குறுங்காடுகளும் கலந்து தோன்றும் அவ்வழி, கடத்தற்கு அருமை வாய்ந்தது. மேலும் தான் செல்லும் காலமோ கோடைகாலம். பசும்பல் மேய்ந்து பழகிய மரையாக்கள், கோடையின் கொடுமையால் புல் அற்றுப் போகவே வருந்தித் தம் வயிற்றுப் பசி தீரக் கற்றாழை இனத்தைச் சேர்ந்தனவும், தமக்கு உணவாகும் தகுதியற்றனவுமாய பரல்களைத் தின்று உயிர் வாழும் கொடுமையுடையது அக்காலம். அவ்வழியினைக் கடந்து செல்வார் ஆங்கு வாழ் ஆறலைக் கள்வர், தாம் கொண்டு செல்லும் கைப்பொருளைக் கவர்வான் வேண்டி ஏவிய அம்பேறுண்டு ஒருபால் உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/48&oldid=822300" இலிருந்து மீள்விக்கப்பட்டது