பக்கம்:பாலைச்செல்வி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இ. புலவர் கா. கோவிந்தன் இந்நாள்வரை பழகியும் என் இயல்பினை முற்றும் அறிந்திலை என்றே யான் எண்ணுகின்றேன். நின்னோடு வாராது, நின்னைப் போகவிடுத்துத் தனித்துக் கிடக்கும் யான், வளமும், வசதியும் மிக்க பெருமனையுள் வாழினும், நின் பிரிவுத் துயர் பொறாது உயிர் இழப்பன்; அதை நீ அறிவை; அறிந்திருந்தும் அறியாதான் போல், பிரிந்து வாழும் மனைவாழ்வு பேரின்பமாம்; உடன்வந்து மகிழும் பாலைநில வாழ்வு பெருந்துன்பமாம்; ஆகவே உடன் வருதல் நன்றன்று! என்று கூறுகின்றனை. அவ்வாறு கூறுதல், பேரன்பு வாய்ந்த நின் பண்பிற்குப் பொருந்துவ தன்று. அன்ப! நின் அன்பினைப் பெற மாட்டாது தனித்திருந்து துயர் உறுதற்காம் விட்டுப் பிரிதலைக் கருதாது, செல்லும் வழியில், காலக் கொடுமையாலும் காட்டின் கொடுமையாலும் துயர் உறும் நினக்குத் துணையாய் நின்று, நின் துன்பத்தில் பங்கு கொண்டு நின் துயர் துடைப்பதே எனக்குப் பேரின்பமாம். அதுவே, கணவனுக்கு மனைவியாற்றும் கடனுமாம். நீ ஆங்குத் துயர் உற, யான் மட்டும், மனையகத்தே மகிழ்ந்து வாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை; மாண்புடைய மனையாளுக்கு அது மரபுமாகாது. ஆகவே, அன்ப! நின்னோடு என்னையும் உடன் கொண்டு செல்ல உளங்கொள்வாயாக!” என வேண்டிக் கொண்டாள். அம்மனையாளின் மாண்பினை உரைப்பது இப்பாட்டு: “மரையா மரல்கவர; மாரி வறப்ப, வரைஒங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர் சுரைஅம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/50&oldid=822303" இலிருந்து மீள்விக்கப்பட்டது