பக்கம்:பாலைச்செல்வி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 49 தண்ணிர் பெறாஅத் தடுமாற்றத்து அருந்துயரம் 5 கண்ணிர் நனைக்கும் கடுமைய காடு என்றால், என்நீர் அறியாதீர்போல, இவைகூறின் நின்நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும் அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடின், அதுவல்லது 10 இன்பமும் உண்டோ எமக்கு?” தலைவன் செலவுக் குறிப்பறிந்த தலைவி, என்னையும் உடன் கொண்டு செல்க எனக் கூறியது இது. 1. மரைஆ-காட்டுப்பசு, மரல்-கற்றாழை இனத்தைச் சேர்ந்த ஒருவகைச் செடி, 2. வரை-மலை; சுரம்-காடு, ஆர் இடை-கடத்தற்கு அரிய வழி: 3. சுரை அம்பு-சுரையோடு கூடிய அம்புகள்; மூழ்க-அழுந்த; சுருங்க-உடல் தளர்ந்து; புரையோர்-குற்றமே புரியும் கொடிய ஆறலைக்கள்வர்; செல்வோர், புரையோர்தம் சுரையம்பு மூழ்கச்சுருங்கி என மாற்றுக;4. உள்நீர்-வயிற்றகத்துநீர், புலர்வாடும்-நீர்வேட்கை மிக்க, வறட்சி கொண்ட, 7. என் நீர்-என் நீர்மை, பிரிந்து உயிர் வாழா என் இயல்பு நின் நீர-நின் இயல்பிற்கு ஏற்ற, 9. அன்பு அறச் சூழாது-அன்பு அறும்படி விட்டுப் பிரிதலைக் கருதாது; 10. நாடின்-உடன் கொண்டு செல்வதை நினைப்பின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/51&oldid=822304" இலிருந்து மீள்விக்கப்பட்டது