பக்கம்:பாலைச்செல்வி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 61 அது இறுதியிலோ, அல்லது இடையிலோ அறுதலல்லது, தொடக்கத்திலேயே அறுந்து விடுவதில்லை. ஆனால், பொருள் அத்தகைய தன்று. அது வரும் வழிகளின் வன்மை மென்மைகளை வகுப்பார் யாரும் இலர். ஆதலின், அது, ஒருவனை அடையத் தொடங்கிய தொடக்க காலத்திலேயே, அடைவது போல் அடைந்து அழிந்து போவதும் உண்டு. ஆதலின், அப் பொருளின் நிலையாமை, யாழின் நிலை யாமை யாயினும் இழிவுடைத்து; விரைவுடைத்து. "ஒருவர்க்கு ஆகூழ் உண்டாக உண்டாகி, அது அழிய அழியும் இயல்புடையது செல்வம். அவ்வாறு ஒருவனுக்கு ஆகூழால் செல்வம் உண்டாய காலத்து, அச் செல்வம் "அவன் இடைவிடா முயற்சியின் பயனாய் வந்துற்றது!” என, அச் செல்வத்தைச் சேர்க்க அவன் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டாது, அவனுக்கு ஆசுழ் உண் டாயிற்று. அதனால், அளவிறந்த செல்வம் வந்து குவிந்தது!’ எனக் கூறிய உலகோர், அவ்வாகூழ் அழிய, அவன் செல்வம் அழிந்த காலத்தில், அவன் செல்வ அழிவிற்கு அவ்வாகூழ் அழிந்ததைக் காரணம் காட்டாது, அவன் செய்த தவறுகளை-அளவிற்கு மீறிய செலவினங் களைக் காரணம் காட்டி, அவனைப் பல்லாற்றானும் பழிப்பர். இவ்வாறு, உலகம் பழிக்க அவனை விட்டு நீங்கும் இயல்புடையது செல்வம். மேலும், ஆகூழ் ஒருவனை அடையும், நீங்கும். அதுவல்லது, அவனுக்கு வேறு கேட்டினைத் தருவதில்லை. ஆனால், அவ்வாகூழால் அவனை அடைந்த செல்வம், அவ்வாகூழ் அவனை விட்டு நீங்க, அவ்வாகூழோடு தானும் நீங்குங்கால், தான் மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/63&oldid=822317" இலிருந்து மீள்விக்கப்பட்டது