பக்கம்:பாலைச்செல்வி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புலவர் கா. கோவிந்தன் அதை வெறுத்து, அதைத் தேடிச் செல்லும் தன் முயற்சியினைக் கைவிடுவன் எனக் கருதினாள். அதனால், அப் பொருளின் நிலையாமைப் பண்பினைப் பல்வேறு நிலைகளில் நின்று விளக்கத் தொடங்கினாள். . 'காதுக்கினிய இசையினைத் தருவது யாழ். ஏழிசையின் இயல்பறிந்து நரம்புகளைத் தெறித்து இசை யெழுப்ப வல்ல கைத்திறம் பெற்றான் ஒருவன், யாழுக் குரிய குற்றம் எதுவும் இல்லாமல், ஏழ் நரம்புகளும் இனிதே அமைந்த யாழை இசைத்து, இன்னிசைத் தேனைப் பொழிந்து கொண்டுள்ளான். மக்களும், அவ்விசை இன்பத்தில் ஆழ்ந்து, அறிவு மயங்கிக் கிடக்கின்றனர். அந்நிலையில், அவ்யாழின் நரம்புகளின் இடைநின்ற நரம்பொன்று, திடுமென அறுந்து விட்டது. அந்நிலையே ஏனைய நரம்புகளும் தம் தொழிலாற்றாவாயின. இசை இன்பம் எங்கோ சென்று அழிந்தது. அவ்விசை இன்பம் போன்றது பொருள். ஒரு நரம்பு அற, ஏனை நரம்புகளும் பயனிழந்து போவது போல், பொருள் நிலைகளுள் - பொருள்தரு வாயில்களுள், ஒன்று அழியின், அந்நிலையே ஏனையவும் அழிந்து, அப்பொருளும், அப்பொருளால் பெறலாம் இன்பமும் அறவே மறைந்துபோம். இவ்வியல் பால், யாழும், பொருளும் ஒத்த இயல்புடைய போல் தோன்றினும், பொருள் யாழினும் இழிந்ததாம். யாழ் நரம்பு இசைக்கத் தொடங்கியபோதே அறுந்து போவதில்லை. யாழ் இசைப்போன், இசைக்கத் தொடங்குவதன் முன்னர், யாழின் கோல், அக் கோலில் பிணிப்புண்டு கிடக்கும் நரம்புகள் ஆகியவற்றின் உறுதிப்பாட்டினை உணர்ந்தே தொடங்குவனாதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/62&oldid=822316" இலிருந்து மீள்விக்கப்பட்டது