பக்கம்:பாலைச்செல்வி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 63 செல்வத்தை அழிக்கும் படைகள் பலவும், பலம் மிக்கவும் உள. இவற்றால், அதற்கு அழிவு எந்நேரத்தினும் உண்டாம். ஆகவே, கொடுங்கோல் ஆட்சியினும், குறைபாடுடையது செல்வம். "இவ்வாறு யாழின் கேட்டினும், ஆகூழ் நீக்கத்தினும், கொடுங்கோல் அரசின் அழிவினும் விரைந்து அழியும் இழிவுடையதாய செல்வத்தைச் சிறந்தோர், சிறந்ததெனச் சிந்திப்பரோ? உயர்ந்த பல பண்பாடு நிறைந்த பெரியோனாய நீ, அப்பொருளை மதித்து, மாண்புடைய நின் மனையாளைப் பிரிந்து, மனையற இன்பத்தை இழத்தல் நின் பெருந்தன்மைக்கு அழகாமோ? "மேலும் இவளைப் பிரிந்து நீ செல்லக் கருதும் இக்காலமும் அதற்கு ஏற்றதன்று. உலகத்து உயிர்களை உய்விக்க வந்தது ஞாயிறு. அது நீதி தவறாது நாடாள வேண்டிய அரசன், அநீதியால் தான் கெட்டதோடு, மறம் அல்லது அறம் அறியாக் கொடியோன் ஒருவனை அமைச்சனாகக் கொண்டு, அவன் காட்டும் கெடுவழி நின்று நாடாளத் தொடங்கிய கொடுங்கோல் ஆட்சி போல், விரைந்து தோன்றிக் கதிர்களை விரித்து, வெப்பத்தை வாரி இறைத்துச் சுடும் கொடிய கோடை காலமன்றோ நீ செல்லக் கருதும் இக்காலம்: விலங்கினங் களுள் வலியால் மிக்கது யானை. எத்தகைய கொடுமை யையும் தாங்க வல்லது அது. வண்டுகள் வந்து மொய்க்குமாறு ஒழுகும் மதநீரும், காண்டற்கினிய உடல் வனப்பும் வாய்ந்த அவ்யானை ஞாயிற்றின் நிலைபிறழ்ச்சி யால் விளைந்த கோடையின் கொடுமை தாள மாட்டாது வருந்தி, நிற்கவும் மாட்டாது நிலை தளர்ந்து, வறண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/65&oldid=822319" இலிருந்து மீள்விக்கப்பட்டது