பக்கம்:பாலைச்செல்வி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இ. புலவர் கா. கோவிந்தன் நிலத்தை உழும் பெரிய நாஞ்சில் போல், கோடுகள் நிலத்திற் புகுந்து கிடக்க, தொங்கும் தன் கையினை உயர்த்தி நிலங்கவிழ்ந்து வருந்தும் கொடுமை மிக்க பாலை வழி, நீ செல்ல எண்ணியுள்ள வழி. நீர்மல்கு சுனைகளும், நிழல்தரு மரங்களும் நிறைந்து, வெற்றிச் சிறப்பு விளங்க நின்ற அந்நிலத்து மலைகள், அக்கோடைக் கொடுமை யால், சுனைநீர் சுருங்கவும், மரங்கள் கருகிப் புகையவும், பாறைகள் வெடித்துப் பொடியாகவும் வருந்தும். அவ்வழி யில், நிலை கலங்காமைக்கு நல்ல எடுத்துக் காட்டுக்களாய மலைகளையும், யானைகளையும், தம் வெப்பத்தால் வாட்டும் ஞாயிறு போல், அறத்திற் பிறழ்ந்து, மறமே விரும்பும் கொடியரன்றோ செல்வர். உன்னைப் போலும் உயர்ந்தோர் ஒருபோதும் செல்லார். அன்புடைய மனைவியைப் பிரியாது, என்றும் அவள் அண்மையில் இருந்து, காக்கக் கடமைப்பட்ட நீ, நின் கடமையில் தவறி, ஞாயிறு போல் கொடுமை செய்து கழிவையேல், இவள், அந் நிலத்து யானை போல் உறுதிப்பாடு இழப்பள். அந்நிலத்து மலைபோல், இவள் நலன் கெடும். இவள் அழிவள். ஆகவே, அன்ப! இவள் அழிவிற்குக் காரண மாயினான் இவன் ' எனும் பழிச்சொல் உன்னைப் பற்றாமை வேண்டின், பொருள் தேடிச் செல்லும் நின் எண்ணத்தைக் கைவிடுக!” அவ் வேண்டுகோள் இது: என வேண்டிக் கொண்டாள். "நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினைவாங்கக் கொடிது ஒர்த்த மன்னவன் கோல்போல, ஞாயிறு கடுகுபு, கதிர்மூட்டிக், காய்சினம் தெறுதலின், உறல் ஊறு கமழ் கடாஅத்து, ஒல்கிய எழில்வேழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/66&oldid=822320" இலிருந்து மீள்விக்கப்பட்டது