பக்கம்:பாலைச்செல்வி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஆ. 65 வறன்.உழு நாஞ்சில்போல் மருப்பு ஊன்றி, நிலம்சேர, 5 விறல்மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம் சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒருபொருள் சொல்லுவது உடையேன், கேண்மின்; மற்று ஐஇய! விழுநர்க்கு இறைச்சியாய் விரல்கவர்பு இசைக்கும் கோல் ஏழும் தம்பயன்கெட இடைநின்ற நரம்பு அறுஉம் 10 யாழினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ? மரீஇத் தாம்கொண்டாரைக் கொண்டக்கால் போலாது பிரியுங்கால் பிறர்எள்ளப் பீடின்றிப் புறம் மாறும் திருவினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ? புரைதவப் பயன்நோக்கார் தம்ஆக்கம் முயல்வாரை 15 வரைவின்றிச் செறும்பொழுதில் கண்ணோடாது உயிர் - வெளவும் அரைசினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ? எனவாங்கு, நச்சல் கூடாது பெரும! இச் செலவு ஒழிதல் வேண்டுவல்; சூழின் பழியின்று; 20 மன்னவன் புறந்தர வருவிருந்து ஒம்பித் தன்னகர் விழையக் கூடின் இன்னுறல் வியன்மார்ப! அது மனும் பொருளே.” பொருள்வயின் பிரியக் கருதிய தலைவனுக்குப் பொருளின் நிலையாமையினையும், இல்லற வாழ்க்கை யின் இன்பத்தினையும் கூறித் தோழி செலவழுங்குவித்தது இது. 1. நடுவு - நீதி, இகந்து - கைவிட்டு, ஒரீஇ - நீங்கி, நயன் - அறம், வினைவாங்க - ஏவ, 2. ஒர்த்த - விரும்பிய, 3. சினம் - பாலை-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/67&oldid=822321" இலிருந்து மீள்விக்கப்பட்டது