பக்கம்:பாலைச்செல்வி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அடங்கிய யானை! உலகெலாம் புகழ வாழும் வாழ்வே உண்மை வாழ்வாம்; உயர்ந்த வாழ்வாம்; உலகப் பெருஞ் செல்வர் ஒரு சிலருள், இவரும் ஒருவர்; உலகப் பேரறிஞர் அனைவரும் ஒருங்கே போற்றும் அறிவுடையார் இவர்; பல நாட்டு அரசியல் தலைவர்களும் பார்த்து வியக்கும் அரசியற் பெருந்தலைவர் இவர்; உலகில் அமைதி காண, அல்லும் பகலும் அயராது உழைத்த உத்தமர் இவர்; எவரும் ஏறிக் காணமாட்டா இமயத்தின் உச்சியை ஏறிக் கண்டவர் இவர்; அலை கடல் ஆழத்தை அளந்து கண்டவர் இவர்; என இவ்வாறு, தம்பால் காணலாம் செல்வம், கல்வி முதலாம் நலம் பல கண்டு, மக்கள் மகிழ்ந்து பாராட்டப் பெரும் புகழ் பெற்று வாழ்வார் உலகில் மிகப் பலராவர். ஒருவர்.பால் கல்வியும், செல்வமும், பண்பும், பேராண்மையும் பிறர் கண்டு வாழ்த்துமளவு பெருகக் கிடப்பதால், அவர்க்கு அவற்றால் பயனும் புகழும் உண்டதால் உண்மை. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/7&oldid=822324" இலிருந்து மீள்விக்கப்பட்டது