பக்கம்:பாலைச்செல்வி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புலவர் கா. கோவிந்தன் அப்பயனும், புகழும் அவர் ஒழிந்த பிறர்க்குப் பயன்தருதல் இல்லை; ஆதலின், அவற்றைப் பெருகப் பெற்றமையால், அவர் பெற்ற புகழ் உண்மைப் புகழாகாது. அவர்க்குப் பயன் அளித்தல் போன்றே அவர் ஒழிந்த பிறர்க்கும் பயன் அளிக்க வரும் புகழே, உண்மைப் புகழாம். அத்தகைய புகழ் பெறும் வழியும் உலகில் உளது. நிற்க. ஒருவர்க்குப் புகழ் பெற உதவுவன இவை மட்டுமாகா. தாம் ஈட்டிய பெரும் பொருளை, அஃது இல்லார்க்கு ஈந்து வாழ்வதாலும் ஒருவர்க்குப் புகழ் உண்டாம். அப்புகழ், அவர்க்குப் பல்லோர் பாராட்டைப் பெற்றுத் தருதலொடு, பல்லோர் பசித் துயரைப் போக்குவதும் செய்கிறது. ஆதலின், ஈகையால் உண்டாம் அப்புகழ், முன்னர்க் கூறிய புகழ் அனைத்தினும் நனிமிகச் சிறந்த புகழாம். "ஈதல், இசைபட வாழ்தல்" எனவும், "உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்" எனவும், ஈகையால் உண்டாம் புகழே, உண்மைப் புகழாம் என இப்புகழை வள்ளுவரும் வாழ்த்தியுள்ளனர். கொடுத்துப் பெறும் இப் புகழின் சிறப்பையும், அப்புகழ் பெற்று வாழும் வாழ்வின் சிறப்பையும் உணர்ந்த உயர்ந்த உள்ளம் வாய்க்கப் பெற்ற ஒரு குடும்பம், தமிழ் நாட்டுச் சிற்றுார் ஒன்றில் இருந்தது. ஒரு காலத்தே பெரும் பொருள் பெற்று வாழ்ந்து, பின்னர் யாது காரணத்தாலோ வறுமையுற்று, அவ்வாழ்விழந்து போகப், பொருள் தருவாரைத் தேடிச் சென்று இரந்து நிற்பர் சிலர்; தோன்றிய நாள் தொட்டு, எவ்வளவோ முயன்றும், வயிறார உண்டற்காம் வழியினைக் காண மாட்டாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/8&oldid=822335" இலிருந்து மீள்விக்கப்பட்டது