பக்கம்:பாலைச்செல்வி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 7 யால் வருந்தி வந்து இரப்பர் சிலர், பெரும்பொருட்கு உடையராய் இருந்தும், அப் பொருளை அடைதற்காம் காலம் வாய்க்காமையாலோ, அப் பொருள் உள்ள இடத்தை விட்டு வேற்றிடம் வந்து வாழ்வதாலோ, அப் பொருளால் பயன் துய்க்கும் வாய்ப்பற்றுப் போக, இரத்தல் தொழிலை இடைக்கால ஏற்பாடாக மேற் கொள்வர் சிலர்; இவ்வாறு வந்து இரப்பார் பலர்க்கும் அவரவர்தம் நிலைநோக்கி, அவரவர்க்கு வேண்டும் பொருள் அளித்து அனுப்புவதே உயர்ந்த கொடையாம். அவ்வாறு கொடுப்பது உயர்ந்தோர் கடனாம்; அவ்வாறு கொடுத்து வாழும் கொடைக்குணம் உடையாரே, வாழ்வாங்கு வாழ்பவராவர்; ஆனால், அத்தகு வாழ்வு, பெரும் பொருள் உடையார்க்கே வாய்க்கும்; அப்பெரும் பொருளும், இடை விடாது கொடுத்துக் கொண்டே வருவதால் குறைந்து போகும்; ஆதலின் கொடைக் குணத்தினைக் குறைவறப் பெற்று வாழ விரும்புவார், தளரா முயற்சியுடையராதல் வேண்டும்; காடும் மலையும் கடந்து சென்று பொருள் ஈட்டிவரும் கடமை உணர்ச்சி உடையராதல் வேண்டும். இவ்வுண்மைகளை உணர்ந்த வன் அம்மனைக் கிழவன். அதனால், முன்னோர் ஈட்டிய பொருள், அவன் மனையில் மலை போல் குவிந்திருப்ப வும், காட்டையும், மலையையும், கடலையும் கடந்து சென்று பொருளிட்டும் முயற்சியினை அவ்வப்போது மேற்கொள்ளும் வழக்க முடையனாயினான். ஒருநாள், அவன், அத்தகைய முயற்சி மேற்கொண்டு செல்லுதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந் தான்; காட்டையும், மலையையும், காட்டாற்றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/9&oldid=822346" இலிருந்து மீள்விக்கப்பட்டது