பக்கம்:பாலைச்செல்வி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இ. புலவர் கா. கோவிந்தன் கடந்து செல்லும் திண்மையுளதாமாறு தேரைச் செப்பனிட்டான். இடைவழியில், வழிக் கொடுமையால் தளர்ந்து விடாது, ஈர்த்துச் சென்று மீளவல்ல குதிரை களைத் தேர்ந்தெடுத்தான். இடைவழியில் கள்வராலும், காட்டுக் கொடு விலங்குகளாலும் உண்டாம் இடையூ றின்றி இனிது சென்று மீளப் பெருந்துணை புரியும் வில்லையும், வேலையும் பழுதிலவாத் தேர்ந்து கொண்டான். அவன் செயல்களைக் கூர்ந்து நோக்கினாள் அவன் மனைவியின் உயிர்த் தோழி ஒருத்தி. பொருள் தேடும் பணி மேற்கொண்டு தன் மனைவியைப் பிரிந்து செல்லத் துணிந்து விட்டான் அவன் என்பதை அச் செய்கை உணர்த்துவது அறிந்தாள். நாடும், கடலும் கடந்து, நாற்றிசையும் சென்று பொருளிட்டி வருவதால், அவன் வாழ்வில் வளம் பெருகும்; அதுவே, ஆடவர்க்கு அறத்துறையும் ஆகும் எனும் உலகியலையும் உணர்ந்தவள் அவள். அவளே, அவன் போக்கு அறிந்து அஞ்சினாள். அவன் அண்மையில் மணம் செய்து கொண்டவன். அவன் பண்புணர்ந்து அவனை மணந்து கொண்ட அவன் மனைவி, அவன்மீது பேரன்புடையள்; அவனை ஒருநாள் பிரிந்திருக்கவும் பொறாது அவள் உள்ளம்; அத்துணை மெல்லிய இயல்புடையாள் அவள்; கற்பிற் சிறந்தவள்; கண் கண்ட கடவுள் கணவன்; வாய்மை வழுவாதவன் கணவன் எனக் கருதுபவள் அவள். முதன் முதலாகக் கண்டு காதல் கொண்ட அன்று, "உன்னை என்றும் Sh(uT” என்று ஆணையிட்டுக் கூறிய அவன் சொல் அழியாது. ஆகவே, பிரிவறியாப் பெருவாழ்வு பெற்று, அவனோடு பேரின்பம் நுகரலாம் எனும் வேட்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/10&oldid=822099" இலிருந்து மீள்விக்கப்பட்டது