பக்கம்:பாலைச்செல்வி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இ. புலவர் கா. கோவிந்தன் தோன்றிய பொருள்களை, அவை தோன்றியதன் பயனைப் பெற வொட்டாது பாழாக்க முயன்றோர்க்கு, அவர்கள், இவ்வுண்மைகளை எடுத்துக் காட்டி, அப் பொருள்களைப் பயனுடையன வாக்கியதோடு, அப்பொருளுக்கு உரியார் புகழ் பெறவும் துணை புரிந்துள்ளனர். அத்தகைய பெரியார் ஒருவர், இவ் வுண்மையை, அஃதறியாப் பெண் ஒருத்திக்கு, உரைக்கும் திறத்தை உணர்த்துகிறது ஒரு கலிப்பா. உருவாலும் திருவாலும் உயர்ந்த பெண் ஒருத்தி, அறிவு, அழகு, அன்பு, ஆண்மைகளிற் சிறந்த ஓர் இளைஞனைக் கண்டு காதல் கொண்டாள். அவனும் அவளைக் காதலித்தான். ஆனால், அக்காதல் உறவினைப் பெற்றோர் அறியார்; அதனால், பலர் அறியக் கூடி மகிழ்தல் அவர்க்கு இயலாது போயிற்று. அப்பெண், பெருஞ் செல்வர்க்குப் பிறந்த ஒரே பெண். மேலும் மனப் பருவம் வாய்க்கப் பெற்றவள். அதனால் தன் வீட்டை விட்டு வெளிவர இயலாத நிலையில் உள்ள அவளை, அவள் வீட்டிற்குச் சென்றே காணுதல் வேண்டும். ஆனால் அவள் பெற்றோர் அறியாவாறு, ஆங்குச் சென்று காண்பது அத்துணை எளிதன்று. பலமுறை முயன்றும் அவனால் முடியவில்லை. அதனால், அவள் தன் அன்பனைக் காண மாட்டாது வருந்தினாள் பலநாள். அம்மனக் கவலையால் அவள் உடல் நலம் கெட்டது. தன் மகளின் உடல் நலக்கேடறிந்த தாய், அது அணங்கால் வந்தது எனக் கொண்டு, அது நீங்க வெறியாட்டு விழா மேற்கொண்டள். வெறியாடிய பின்னரும் அந்நோய் நீங்காமையால், தன் மகளின் ஒழுக்கத்திற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/70&oldid=822325" இலிருந்து மீள்விக்கப்பட்டது