பக்கம்:பாலைச்செல்வி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ↔ 69 குறையுளதோ என அஞ்சினாள். ஊரிலும், அப் பெண்ணின் காதல் உறவு குறித்து அலர் எழத் தொடங்கி விட்டது. அதனால், அவள் பெற்றோர், அவள் மணத்திற்காம் ஏற்பாடுகளை மேற்கொள்வாராயினர். தன் பெண்மையால் தன் காதல் உறவினைப் பெற்றோர்க்கு உணர்த்த இயலாது வருந்திய அப்பெண் தன் பெற்றோர், தன்னை வேறு ஒருவனுக்கு மணம் செய்து விடுவரோ என அஞ்சினாள். அந்நிலை உண்டாயின், தன் கற்பிற்கு இழுக்காம். கற்பிழந்து வாழ்தல் காரிகையர்க்கியலாது. ஆகவே, தாயையும், தாயினும் சிறந்த நாணையும் மறந்து, பெற்றோர் அறியாவாறு, அவ்விளைஞன்ோடு அவனுர் சென்று, ஆங்கு அவனை மணந்து வாழத் துணிந்தாள். ஒருநாள், இருள் நீங்கும் விடியற்காலத்தே, இருவரும் திட்டமிட்டவாறே, வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர். காலையில் தன் மகளைக் காணாது கலங்கினாள் தாய். அந்நிலையில் ஊரார் வழியாகத் தன் மகளின் காதல் வாழ்வை உணர்ந்து, அதை அப்போதே அறிந்து அவள் அவனை மணக்கத் துணை புரியாது போனேனே எனப் புலம்பினாள். தாய் புலம்புவது கண்டாள் செவிலி. அப் பெண்ணை உணவு ஊட்டி, அவள் உடலையும் உணர்வூட்டி, அவள் அறிவையும் வளர்த்தவள் அச்செவிலி, அவள், பெற்ற நற்றாயைப் பார்த்து, "நம் மகளும், அவள் காதலனும் யாண்டும் சென்றுவிடார். நாடுதோறும், ஊர்தோறும், குடிதோறும் சென்று தேடிக் கொணர்வேன். ஆற்றியிரு!” எனக் கூறி விட்டு, அவர்களைத் தேடிக் கொண்டு, அவர்கள் சென்ற பாலை நிலத்துப் பெருவழியே சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/71&oldid=822326" இலிருந்து மீள்விக்கப்பட்டது