பக்கம்:பாலைச்செல்வி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 71 நிலையினை யான் அறியக் கூறுமாறு, தங்களை வேண்டிக் கொள்கின்றேன்,” என்று கூறி வேண்டினாள். இடைவழியில், தம் எதிரே சென்ற அவ்விருவரையும் கண்டு, அவருள், அவ்வாண்மகன், உலகில் ஆடவர்.பால் அமைய வேண்டிய அழகை யெல்லாம் ஒருங்கே கொண்டான். அவ்வாடவர் குலத்திற்குத் தலைமை தாங்க வல்ல தகுதிப்பாடுடையான் என்பதையும், அப்பெண் அவனோடு செல்லும் உரிமையால், செல்லும் சுரத்தின் கொடுமையினைக் கருதாக் கற்பு மேம்பாடும், மடம் முதலாம் பெண்மைக் குணங்களைக் குறைவறப் பெற்ற பெருமையும் உடையாள் என்பதையும் அறிந்து, அக மகிழ்ந்து வந்த அவ் அந்தணர், சென்ற அவர்களைத் தேடிவரும் இவள், அவர்களை அறியக் காட்டிய ஆர்வத்தைக் கண்டு, இவள், சென்ற அப்பெண்ணின் தாய் என்பதை அறிந்து, "தாயே! தாங்கள் கூறிய அவ்விரு வரையும் இடைவழியில் பார்க்காமல் வரவில்லை; பார்த்தே வந்தோம். பார்த்து, அவர்கள் போக்கில் பிழை இல்லை, அவர்கள் செயல் அறனொடுபட்டதே என்பதை உணர்ந்து, அவரைத் தடுக்காது, மாறாக, வாழ்த்தி வருகிறோம். - "தாயே! மலையில் பிறக்கிறது சந்தனம். ஆனால், அது என்றும் அம் மலையிலேயே இருந்து விடுவதில்லை; மலையிற் பிறக்கும் சந்தனம், முற்றிப் பயன்தரத் தொடங்கும் வரையே ஆங்கு இருக்கும். பயன்தரும் பருவம் வந்துற்றதும், தான் பிறந்த அம்மலைக்கு எவ்வகையிலும் பயன்படாது. அம்மலையை விட்டகன்று, தன்னைப் போல் நறுமணம் நாறும் பிற பொருள்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/73&oldid=822328" இலிருந்து மீள்விக்கப்பட்டது