பக்கம்:பாலைச்செல்வி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 75 உயர்ந்த உரவோனாவன்; அவனை வழிபட்டு, அவன் பின் சென்ற நும் மகளும், கற்பு நெறி நிற்கும் காரிகையாவள்; அவர் மேற்கொண்ட நெறி, அறநெறிகள் பலவற்றுள்ளும் தலையாய அறநெறியாம். இம்மையிலும், மறுமையிலும் பிரிவறியாப் பெருவாழ்வு அளிக்கும் அற வழியும் அஃதே ஆம். ஆகவே, தாயே! சென்ற நும் மகள் குறித்து மனங் கலங்காது, மீண்டு தும் மனை புகுக!” எனக் கூறினர். அந்தணர் கூறிய அவ்வறம் விளக்கும் அழகிய பாட்டு இது: "எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல், உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஒரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல்மாலைக், கொளை, நடை அந்தணர்! வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை 5 என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணிரோ? பெரும ! காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை: ஆண்எழில் அண்ணலோடு அரும்சுரம் முன்னிய 10 மாண்இழை மடவரல் தாயிர் நீர் போlர்? பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்? நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அணையளே, சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை 15 நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/77&oldid=822332" இலிருந்து மீள்விக்கப்பட்டது