பக்கம்:பாலைச்செல்வி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இ. புலவர் கா. கோவிந்தன் ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்? சூழுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே; 20 எனவாங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; சிறந்தானை வழிபடிஇச் சென்றனள், அறந்தலை; பிரியா.ஆறும் மற்று அதுவே." உடன்போக்கு மேற்கொண்டு சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலியை, இடைவழியில் அந்தணர் கண்டு, அறமும், உலகியலும் உணர்த்தியது இது. 1. எறித்தரு - எறித்தலைச்செய்கின்ற;2. கரகம்- கமண்டலம்; முக்கோல்-முத்தி வணங்கும் முனிவர் என்பதை உணர்த்த அவர் ஏந்தும் முத்தலைக்கோல்;3. நெறிப்பட- முறையாக, சுவல்- தோள்; வேறுஒரா - அறம் அல்லாத பிற மறங்களை மனத்தாலும் நினையாத, 4. குறிப்பு ஏவல் செயல்மாலை - ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாகப்பெற்ற, கொளை - கொள்கை; நடை - ஒழுக்கம், 5. வெவ்விடை - கொடிய பாலைநிலம் போலும் இடங்கள்; செலல்மாலை ஒழுக்கம் - செல்லுதலை இயல்பாக உடைய ஒழுக்கம், 9. கடம் - பாலைநிலத்து வழி; 10. ஆண்எழில் - ஆடவர்க்கு உரிய அழகு; முன்னிய - போகவேண்டும் என முன்கூட்டியே கருதிவந்த, 11. டோlர் - போல இருந்தீர், நீர், தாயிர் போlர் என மாற்றி, நீர் அவள் தாய்போலும் எனக் கொள்க. 12. பலஉறு- நறுமணப்பொருள்கள் பலவற்றோடு கலக்கும்; படுப்பவர் - பூசிக்கொள்வார்; அல்லதை - அல்லது; 15. சீர் - சிறப்பு, கெழு - பொருந்திய, 17. தேருங்கால் - ஆராயும்பொழுது, 18. ஏழ்புணர் - நரம்புகள் ஏழும் கூடப்பிறக்கும்; முரல்பவர் - பாடுவார்; 22, இறந்த - மிகஉயர்ந்த, எவ்வம் - வருத்தம், படரன்மின் - கொள்ளற்க; 24. அறம்தலை - தலை அறம் என மாற்றித் தலையாய அறமாம் எனக் கொள்க; பிரியா ஆறு - இம்மை மறுமை ஆகிய இரண்டிடத்தும் பிரியாது வாழும் வழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/78&oldid=822333" இலிருந்து மீள்விக்கப்பட்டது