பக்கம்:பாலைச்செல்வி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஆ 79 வனப்பு இழப்பன். கைப்பொருள் இன்றிக் கலங்கும் இளைஞர்களின் உடல் தளர்ந்து வாடுவது போல், தம் கிளைகள் வாடி வதங்கவும்; பண்புமிக்க பெரியோர்கள் பால் செல்வம் உண்டாயின், அச் செல்வம், அவர்பால் நெடிதுநாள் நின்று, ஊருணியில் நிறைந்த நீர் போலவும், ஊர் நடுவே நின்ற மாமரத்தின் பழங்கள் போலவும், உலக மக்கள் அனைவர்க்கும் பயன்படும். ஆனால், அச்செல்வம் வாய்க்கப் பெற்றவன், இழிந்த குணங்களுக்கெல்லாம் இருப்பிடமாய சீரிலாச் சிறியோனாயின், அச்செல்வம் அவன்பால் நெடிது நில்லாது, அவனைச் சேர்ந்த சிலர்க்கும் பயன்படாது பாழாம். அச் சிறியோன்பால் சேர்ந்த செல்வம் போல், தம் அடியில் வந்து நிற்பார்க்குச் சிறிது நிழலும் தந்து உதவமாட்டாது, இலைகள் எல்லாம் உலர்ந்து உதிர்ந்து போகவும்; அளவிற்கு மீறிய கொடுமை உடையனாய் எவர்க்கும் கேடே புரியும் ஒருவனின் இறுதிக் காலத்தில், அவனேயன்றி, அவன் உற்றார் உறவினர்களும் அழிந்து போவர். அதைப் போல், அடிமரமும், அதன் கிளைகளும் அழிவதோடு நில்லாமல், அவற்றின் ஆணி வேர்களும் காய்ந்து கருகவும், ஞாயிறு, தன் வெப்பத்தை யெல்லாம் வாரி இறைத்துக் காய்வதால், மக்கள் மனம் கலங்கி, வாய்விட்டுப் புலம்ப, ஆறிலொரு பகுதி என்ற முறையைக் கைவிட்டு, அவர்பால் உள்ள எல்லாப் பொருள்களையும், கொலைத் தொழிலுக்கு அஞ்சாத கொடியோரை அரசியல் அலுவலராகக் கொண்டு, கொள்ளையடித்து வாழும் கொடுங்கோலன் ஆட்சியில், அவன் நாட்டு மக்களும் மாவும், பசியும் பிணியும் உற்று, உயிர் இழத்தல்போல், மரங்கள் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/81&oldid=822337" இலிருந்து மீள்விக்கப்பட்டது