பக்கம்:பாலைச்செல்வி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 凈 புலவர் கா. கோவிந்தன் "அன்ப! இளமை இன்பம் நுகர்தற்குரிய காலம். "தம்மை வந்து அடைந்தார்க்கு அன்பு காட்டுவதே செல்வர்க்கு அழகு, எவர்க்கும் எவ்விதத்தினும் துயர் விளைக்காமையே இசை பெறும் வழியாம். அன்போடும், அருளோடும் வருவதே பொருளாம்!' என்றெல்லாம் அற நூல்கள் கூறுகின்றன. அவ் அற நூல்களை ஐயம் திரிபு அறக் கற்றுத் தெளிந்த நீ அவ்வுண்மைகளை மறந்து விட்டனை போலும். இன்பம் நுகர வேண்டிய இளமைக் காலத்தைப் பாழ்செய்து விட்டுப் பொருள் தேடிப் போகின்றனை. நீயே எல்லாம் என நின்னை வந்தடைந்துள்ள நின் மனைவியைக் கைவிட்டுப் பிரியத் துணிந்தனை. நின்னைக் காதலித்துக் கைப்பிடித்த மனைவியையே துயர்க்கு உள்ளாக்குகின்றனை. அவள் அலறி அலறிக் கூவி அழுமாறு, அவளைப் பிரிந்து போவது அறம் அன்று என்று எண்ணாது, பொருளே எல்லாம் எனப் பிழைவழி காட்டும் நின் நெஞ்சம் கூறுமாறு, கெடுவழி நின்று பொருள் தேடிப் போயின், அவள் நின் அன்பற்று அழிவள். ஆகவே, பெரும! போகும் எண்ணத்தைக் கைவிடுவாயாக!” என அறிவுரை கூற விரும்பினாள். ஆனால், அதை அவ்வாறே கூறாது, "அன்ப ! எண்ணிய இன்பத்தை எண்ணியாங்குத் துய்க்கத் துடிப்பது இளமையின் இயல்பு. அவ்வின்பம் பொருள் துணை இல்லார்க்கு வாய்ப்பது இல்லை. அப் பொருள் இளமையில் வாய்க்காது போயின், அவ் விளைஞன், அவ் விளமைக் காலத்து இன்பங்களை நுகர மாட்டாது மனங்கலங்குவன். அக்கலக்கத்தால் உடல் தளர்ந்து வாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/80&oldid=822336" இலிருந்து மீள்விக்கப்பட்டது