பக்கம்:பாலைச்செல்வி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. இ. புலவர் கா. கோவிந்தன் உடையதாதல் வேண்டும். அத்தகைய வாழ்வையே விழுமியோர் விரும்புவர். நம் வாழ்வும் அத்தகைய வாழ்வாதலையே நீயும் விரும்புவை. அவ்வாழ்வு பெற வேண்டுமாயின், நம் பால் கொள்ளக் குறையாக் குன்றனைய செல்வம் கொழித்தல் வேண்டும். அறத்தை யும், ஆற்றலையும், இறவா இன்பத்தையும் தர வல்லது அச் செல்வம் ஒன்றே. ஆகவே, அச் செல்வம் சேர்க்கும் பணியினை யான் விரும்பி மேற்கொண்டு விட்டேன். பிற்பயக்கும் பேரின்பம் கருதிப் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக்கொண்டு, பொருள் தேடிப் போக எனக்கு விடை தருவாயாக!” என வேண்டி விடை பெற்று வெளிநாடு சென்றான். சென்ற அவன், வருவதாகக் கூறிச் சென்ற காலம் வரவும் வந்திலன். அவனை இமைப் பொழுதும் பிரியாது வாழ்ந்தவள் அவன் மனைவி. அவள் பொருளின் பெருமை குறித்து அவன் கூறியன உண்மையாதல் உணர்ந்து, அதனால் ஒருவாறு உள்ளம் தேறி, அவன் பிரிந்து போவதற்கு இசைந்தாள். ஆனால், சென்ற தன் கணவன், அவன் கூறிச் சென்றவாறு விரைவில் வாராமையால் வருந்தினாள். அவன் விரைவில் வாரான் போலும் என ஐயுற்றாள். அதனால் அவள் துயர் மிகுந்தது. தன் துயர் நிலை கண்டு, தன்பால் வந்த தோழியைப் பார்த்துத் "தோழி! செல்வம் சேர்க்கச் சென்ற நம் அன்பர் விரைவில் வருவாரோ? அவர் கூறிச் சென்றவாறு, விரைவில் வாரார் என்றே யான் எண்ணுகின்றேன். அவ்வாறு எண்ணுதற்குக் காரணம் இல்லாமற் போக வில்லை. தோழி! அவர் சென்ற அக்காட்டு வழி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/88&oldid=822344" இலிருந்து மீள்விக்கப்பட்டது