பக்கம்:பாலைச்செல்வி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 87 செந்நெருப்புப் போல் சுடும் வெம்மையுடையமையால், ஆங்குச் செல்வார் அடி பொறுக்கலாகாது வருந்தும் கொடுமையுடையது. இலைகள் பசுமை இழந்து, உலர்ந்து உதிர்ந்து போயினமையால், தீய்ந்து போன கொம்புகளைக் கொண்ட மரங்களே நிறைந்து, இன்பநிலை இழந்து, சென்றாரைத் துன்புறுத்தும் தன்மையுடையது. மலையில் வளர்ந்த மூங்கில்களும் வாடி வறளுமாறு ஞாயிற்றின் கொடிய கதிர்கள் காய்தலால், ஆங்குச் செல்லச் சிந்தையால் சிந்திப்பாரையும் வருத்தும் வழிக் கொடுமை வாய்ந்தது. இச் செய்தியை நமக்கு அறிவித்தாரும் அவரேயன்றோ! அத்தகைய கொடுமை மிக்க வழியில் சென்றவர், எவ்வாறு விரைந்து மீளுதல் இயலும் : உறுதியாகக் கூறுகிறேன், அவர் விரைந்து இவண் வந்து சேரார். தோழி! அவரை இமைப் பொழுதளவும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தறியாத யான், எவ்வாறு அத்துணைக் காலம், அப் பிரிவுத் துயர் தாங்கி ஆற்றியிருப்பேன்?" என்று கூறி வருந்தினாள். காட்டு வழி கொடுமை நிறைந்தது எனத் தன் காதலன் கூறியது கொண்டே, அவன் விரைந்து வாரான் என்று எண்ணி வருந்துகிறாள் என்பதறிந்த தோழி, அவளை நோக்கித், "தோழி! நீ கருதுமாறு காதலர் வாராதிரார், அதற்கு மாறாக, அவர் விரைவில் மீள்வர். இது உறுதி. அவ்வாறு யான் துணிந்து கூறுவதற்கும் காரணங்கள் உள. தாம் சென்ற காடு கொடுமைகள் நிறைந்தது என்று கூறிய அவரே, "அக்காடு, மனையகத்தே தாம் விட்டுப் பிரிந்து வந்த மனைவியரை நினைப்பூட்டி, மனைவியரைப் பிரியாதிருந்து மகிழ்ந்து வாழ வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/89&oldid=822345" இலிருந்து மீள்விக்கப்பட்டது