பக்கம்:பாலைச்செல்வி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இ. புலவர் கா. கோவிந்தன் காதல் வாழ்வின் சிறப்பினை அறிவூட்டி, அவர்களை வந்த வினைமுடித்து, விரைவில் வீடு திரும்புமாறு செய்யவல்ல காட்சிகளையும் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். காடு கொடுமை உடைத்து என்று கூறிய அவர், தம் கன்றுகள் புகுந்து உண்டு, பின்னர்த் தம் தாயும் தந்தையும் உண்ண வேண்டும் என்பதைத் தம் இளமையால் மறந்து கலக்கிச் சேறாக்கிய நீரும் சிறிதே இருப்பது கண்டு, முதலில், தாம் விரும்பும் தம் பிடிகளுக்கு ஊட்டிவிட்டு எஞ்சிய நீரைப் பின்னர்த் தாம் உண்ணும் களிறுகளையும், தாம் விரும்பும் தம் பெடைகள், வெய்யிற் கொடுமை தாளாது வருந்துவது கண்டு, தம் சிறகுகளை விரித்து, அவற்றின் நிழலால், அப்பெடைகளின் வருத்தத்தைப் போக்கும் அழகிய ஆண் புறாக்களையும், காயும் ஞாயிற்றின் கொடுமையின் நீங்கி நிற்கத் தக்க நிழலைக் காணாது, வருந்தும் தம் பிணைகளின்மீது வெய்யில் விழா வண்ணம் அவற்றின் அணித்தே நின்று, அவ் வெய்யிற் கொடுமையைத் தாம் தாங்கிக் கொண்டு, தம் நிழலை அவற்றிற்குத் தந்து, அவற்றின் துயர் போக்கும் அன்புடைய கலைமான்களையும் உடையது அக்காடு! என்று உரைத்ததை நீ மறந்து விட்டனையோ? இத்தகைய இன்பக் காட்சிகளைக் காண்பார் உள்ளத்தில் காதற் கனலை மூட்டிவிடும் அழகிய காட்சிகளைக் கொண்ட அக்காட்டு வழியைக் கடந்து செல்வார், ஆங்கு அவற்றைக் கண்டும், நெடிது நாள் நிற்பரோ? களிறும், கலையும், புறாவும் தாம் விரும்பும் தம் பிடியும், பிணையும், பெடையும் வருந்தும் வருத்தம் போக்கி வாழ்வளிக்கும் காட்சிகளைக் காணும் அவர், தம் மனைவியர் வருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/90&oldid=822347" இலிருந்து மீள்விக்கப்பட்டது