பக்கம்:பாலைச்செல்வி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 89 வாராதிருப்பரோ? தாம் காதலிக்கும் உயிர்களின் உறுதுயர் போக்கத் தாம் துயர் ஏற்றலைத் தயங்காது மேற்கொள்ளும் அக் காட்சிகளைக் காண் பார், காட்டு வழியின் கொடுமைக்கு அஞ்சித், தாம் வாராதிருந்து, தம் மனைவியரை வருத்துவரோ ? விரைந்தோடி வீடு அடையாதிருப்பரோ? ஆகவே, தோழி! அவ்வழியில் சென்ற நின் காதலனும் விரைவில் வந்து சேர்வன். மேலும், நம் மனையில் பல்லியும் நற்சொல் கூறுகிறது. நம் இடக் கண்களும் துடிக்கின்றன. ஆகவே, அவன் விரைந்து வந்து சேர்வன். நீ வருந்துவது ஒழிக!” என்று கூறித் தேற்றினாள். தேற்றிய தோழியின் தெளிவுரையினைக் கூறுகிறது இப்பாட்டு: "அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிதாய பகைவென்று, பேணாரைத் தெறுதலும், புரிவுஅமர் காதலிற் புணர்ச்சியும் தரும் எனப் பிரிவுஎண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்; வருவர்கொல்? வயங்கிழாஅய்! வலிப்பல்யான், கேஎள்இனி; 5 'அடிதாங்கும் அளவின்றி, அழலன்ன வெம்மையால் கடியவே, கணங்குழாஅய்! காடு, என்றார், அக்காட்டுள் 'துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னிரைப் பிடியூட்டிப் பின்உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே, 'இன்பத்தின் இகந்துஒரீஇ, இலைதீந்த உலவையால் 10 துன்புறுஉம் தகையவே காடு' என்றார், அக்காட்டுள் 'அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை, மென்சிறகரால் ஆற்றும் புறவு' எனவும் உரைத்தனரே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/91&oldid=822348" இலிருந்து மீள்விக்கப்பட்டது