பக்கம்:பாலைச்செல்வி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ફૂ புலவர் கா. கோவிந்தன் 'கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னரும் தகையவே காடு ' என்றார், அக்காட்டுள் 15 இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை எனவும் உரைத்தனரே, என வாங்கு, இணைநலம் உடைய கானம் சென்றோர், புனைநலம் வாட்டுநர் அல்லர், மனைவயின் 20 பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே.” பொருள்வயின் பிரிந்த தலைவன், காடு கடுமைய வாதலின், விரைவில் வாரான் எனக் கொண்டு தலைவி வருந்தக் காடு காதற் காட்சிகள் நிறைந்த கவின் உடையது. ஆகவே, விரைந்து வருவன் எனத் தோழி ஆற்றுவித்தது இது. 2. பேனார்-பணியாதார்; தெறுதல்-அழித்தல், 3. புரிவு அமர்-உள்ளம் ஒன்றுபட்ட 5. வலிப்பல்-உறுதியாகக் கூறுவேன்; 8. துடி அடி-துடிபோலும் அடி, கயந்தலை-மென்மையான தலை யினை உடைய யானைக்கன்று; சின்னிர்-சிறிது நீர்; 10. இகந்து-நீங்கி, ஒரீஇ-நீங்கி; தீந்த-தீய்ந்து உலர்ந்த, உலவைகொம்பு; 12. அசை இய-வெய்யிற் கொடுமை தாளாது வருந்திய 13. சிறகர்-சிறகு (இறக்கர்) வண்டு, வண்டர் என வருதல்போல், அர் எனும் ஈற்றுப் போலி பெற்று வந்தது; புறவு-புறா 14. வேய்-மூங்கில்; கனைகதிர்-ஞாயிற்றின் நிறைந்த கதிர்கள்; 15. துன் அரும் தகைய-செல்லுதற்கும் அரிதாயதன்மை; துன்னுதல்-அடைதல், 16. இன்னிழல்-இனிய நிழல்; பினை-பெண்மான், 17. கலைஆண்மான்; 19. இனைநலம்-இளையநலம்; இவைபோலும் நன்மைகள்; 20. புனைநலம்-பண்ணிய அழகு, 21. பாங்கு ஒத்து இசைத்தன-நல்ல இடத்தே இருந்து ஒலித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/92&oldid=822350" இலிருந்து மீள்விக்கப்பட்டது