பக்கம்:பாலைச்செல்வி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 மறப்பர் மதியிலார்! பழந்தமிழ் மக்கள் தம் மக்களை வளர்ப்பதில் பெரிதும் விழிப்புடையராய் விளங்கினர். தம் மக்கள், 'இவனைப் பெற, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? எனப் போற்ற வாழும் பெருமைசால் குணங்களைப் பெற்றவராதல் வேண்டும் என விரும்பினர். அவ்வாறு விரும்பிய அவர்கள், அம் மக்கள் அவர்கள் பிற்கால வாழ்வில் அவ்வாறு சிறந்து விளங்குதற்கு, அம்மக்களின் இளமைக்கால வாழ்வே வழித்துணையாதல் வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள். ஒருவர் நல்லோராய் வாழ வேண்டின், அவரோடு சேர்ந்து வாழ்வோரும் நல்லோராதல் வேண்டும். தீயோர் நல்லோராவதும், நல்லோர் தீயோராவதும், சேர்ந்து வாழும் வாழ்க்கையால் உண்டாம். நம்மோடு பழகுவார் தீயோராயின், அவர்கள், நாளடைவில், நம்பால் உள்ள நல்லியல்புகளைக் கெடுத்துத் தம்மையொத்துத் தீயோராக்கி விடுவர். அவர் நல்லோராயின், அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/93&oldid=822352" இலிருந்து மீள்விக்கப்பட்டது