பக்கம்:பாலைச்செல்வி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இ. புலவர் கா. கோவிந்தன் நம்பால் காணலாம் ஒரு சில தீமைகளையும் போக்கி நல்லோராக்கி விடுவர். சேர்ந்து பழகும் பழக்கத்தின் வன்மையினை உணர்ந்தவர் தமிழர், மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு, மனம் தூய்மை செய்வினை து.ாய்மை இரண்டும் இனந்துாய்மை தூவா வரும் எனத் தாம் உணர்ந்த உண்மைகளை உலகிற்கு உரைத்தும் சென்றுள்ளனர். பழகும் இனத்தின் பண்பு இது என அறிந்த பழந்தமிழர், தம் மக்களின் விளையாட்டுத் தோழர்களும் பண்பால் நிறைந்தவராதல் வேண்டும் என விரும்பினர். விரும்பியதோடு நில்லாமல், அத்தகையாரையே தேடிக் கொணர்ந்து, அவரொடு சேர்ந்து விளையாடச் செய்தனர். பழந்தமிழ் மக்கள், இந்நெறியில், மிகவும் உறுதிப்பாடுடைய ராய், பெரிதும் விழிப்புடையராய் விளங்கினமையால், அவர்கள் பெற்றெடுத்த பெண் மக்களின் தோழியராய் வந்த பெண்களும், பேரறிவும், பிழையா ஒழுக்கமும் வாய்ந்த உயர்ந்தோராய்க் காணப்பட்டனர். ஆடவர்க்கும் அறிவூட்ட வல்ல அத்துணைத் தெளிந்த அறிவு அத் தோழியர்பால் அமைந்திருந்தது. அத்தகைய தோழி ஒருத்தி, தன் ஆடற் பருவம் தொடங்கித் தன்னைப் பிரியாது தன்னோடு ஆடிப்பாடி வளர்ந்தாளொருத்தியின் கணவனுக்கு உரைப்பாள்போல், உலகினர்க்கெல்லாம் உரைக்கும் ஓர் அறிவுரை, அத்தோழியரின் ஆழ்ந்த அறிவுடைமைக்கு ஒர் எடுத்துக்காட்டாம். அத் தோழியின் அன்பிற்கு உரியளாய ஒரு பெண்ணை மணந்து மகிழ்ந்து வாழ்ந்திருந்த ஓர் இளைஞன், ஒரு நாள், பொருளிட்டி வருதல் வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/94&oldid=822354" இலிருந்து மீள்விக்கப்பட்டது