பக்கம்:பாலைச்செல்வி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ళ 93 எனும் வேட்கையுடையனாய், மனைவியை மனையகத்தே விடுத்து வெளிநாடு செல்லத் துணிந்தான். அதை அறிந்தாள் தோழி. அவர்கள் வாழ்க்கைக்கு வற்றாப் பெருஞ் செல்வம் வேண்டும் என்பதை அவள் அறிவா ளாயினும், அப்பொருளை ஈட்ட வேண்டிய காலம் அதுவன்று. அதை அத்துணை இளமையிலேயே ஈட்ட வேண்டுவதும் இல்லை. பொருளிட்டு முயற்சியினும், அவ்விளமைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டுவன வேறு எவ்வளவோ உள என்பதையும் உணர்ந்தவ ளாதலின், பொருளிட்டுவதற்காக, அவன் அப்போது பிரிந்து போவதை விரும்பவில்லை. அதனால், அவன்பால் சென்று, "அன்ப! உன்பால் ஒன்று உரைக்க வந்துளேன், அருள்கூர்ந்து கேட்டு, ஆவன செய்ய வேண்டுகிறேன். அன்ப ! ஒருநாள் வழக்கத்திற்கு மாறாக, நீ சிறிது மிகுதியாக உறங்கி விட்டனை, அது கண்ட நின் மனைவி, 'இம்மாற்றத்திற்கு ஒரு காரணம் இருத்தல் வேண்டும். யான் அறியா அக்காரணம் யாதோ? அதனால் எனக்கு, என்பால் அவர் காட்டும் அன்பிற்கு யாது கேடு வந்துறுமோ? என அஞ்சினாள். இந்நிகழ்ச்சி நின் நினைவை விட்டு அகன்றிராது. அத்துணை நெகிழ்ந்த உள்ளம் உடைய இவளை விடுத்துச் சேனெடும் தாரம் செல்லப் பிரிதல் பொருந்தாது. மேலும் நீ செல்லும் வழியோ இடையூறு மிகுந்தது. இன்னல் பல நிறைந்தது. தன்னை அணுகுவாரை, வளைந்த தன் முட்களால் தைத்து வதைக்கும் முள்வேலி போல், வழியில் செல்வார் உயிரைக் கொள்ளை கொள்ள வல்ல வில்லேந்திய வீரர், தம் கைப்பட்டு இறந்து வீழ்ந்தார் உடல்கள் மீது, அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/95&oldid=822356" இலிருந்து மீள்விக்கப்பட்டது