பக்கம்:பாலைப்புறா.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

கலைவாணி, இலக்கு இல்லாமல் நடந்து, மக்கள் திரளில் இருந்து விடுபட்டு, கோணச்சத்திரத்தை மறைக்கும் ஒரு காட்டுப் பகுதிக்கு வந்தாள். இரு பக்கமும் கருவேலக் காடுகள். இடையில் தார்சாலை... அந்தச் சாலை துண்டிக்கப்பட்ட பாலத்துக்கு வந்தாள். பாழடைந்த பங்களாவின் அடிவாரம் போல் உள்வாய், சிறிது தொலைவில், மாற்று மண் பாதையில் லாரிகளும் பேருந்துகளும் விட்டுவிட்டு ஒடிக் கொண்டிருந்தன. மானுடக் கண் படா இடம்... அப்படியே சுருண்டு கிடந்தாள். எப்படி பாம்பு சுருண்டு கிடக்குமோ... அப்படி... தலையும் கால்களும் சங்கமமாகும்படி, வட்டமாய்க் கிடந்தாள். தூக்கமோ, துக்கமோ...இவை இரண்டும் கலந்த ஏதோ ஒரு நிலை.

கலைவாணி, கால நேரக் கணக்கற்று, கண்களை மூடாமல், எங்கோ தூரத்துப் பார்வையாய் பார்த்துக் கிடந்தாள். பிறகு எழுந்து, ஈரக் கசிவான தரையில் உடல் போட்டு ஒரு வட்டக் கல்லில் தலை சாய்த்துப் படுத்தாள்; ராசலட்சுமி சொல்லால் குத்தியது அவளை உலுக்கியது. அவளுக்கு பதிலளிப்பது போல் சத்தம் போட்டே பேசினாள் ராசலட்சுமியம்மா, ள்ன் மகள்தானா ஒனக்குக் கிடச்சாள்னு கேட்டியே... அது தப்பு... போயும் போயும்... நான்தான் ஒன் மகளுக்கு கிடச்சிருக்கேன்... எந்த பாவமும் செய்யாத நான்தான் நானேதான்... அடேய் மனோகரா, என் நிலைமைய பாருடா.. இப்போக் கூட என்னை விரட்டாமல், விரட்டுறியடா.. விரட்டுறியடா.. எங்கே போவேன்? யார்கிட்ட தஞ்சமாவேன்... ? மோகன்ராம்... துரோகியாகிட்டான். அசோகன் கிட்டே போகவும் மனசில்ல... அடைக்கலம் கொடுக்கிறவராய் இருந்தால் டிஸ்சார்ஜ் செய்திருக்க மாட்டார். ஒப்புக்குக் கூட, தங்கிக்கோன்னு ஒரு வார்த்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/237&oldid=635682" இலிருந்து மீள்விக்கப்பட்டது