பக்கம்:பாலைப்புறா.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாலைப்புறா

‘அண்ணன் எதுக்கு அத்தே. நான் இருக்கேன்’

ராசலட்சுமி, அண்ணன் மகன், அடிக்கடிதங்கும் அறைக்குள் போனாள். டிரங்க் பெட்டியை உருட்டும் சத்தம் கேட்டது. மகளால் பொறுக்க முடியவில்லை. அம்மாவைப் பற்றித் தெரியும். முன் காலை வைக்கும் போதே, பின் காலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்... இல்லையானால், போய் விடுவாள். நான்கடி நடக்க விட்டால், நானுறு கிலோமீட்டர்பாய்ந்து போவாள்.

சந்திரா, அந்த அறைக்குள் ஒடியபோது, சங்கரன், கலைவாணியிடம் கையெடுத்துக்கும்பிட்டே கேட்டான்.

‘நாங்க கெளரவமான குடும்பம்... எங்கள வாழ விடும்மா... வாழவிடு’

கலைவாணி, சங்கரனையே உதடுகள் துடிக்கப் பார்த்தாள். பிறகு, அவனுக்கு முதுகைக் காட்டியபடியே நடந்தாள். கொல்லைப் புறக்கதவை மெள்ளத் திறந்து, அந்த வீட்டை ஒரு சுற்றுச்சுற்றி, அருகே அவளை அழைக்க வந்ததுபோல் முடிந்துபோய்க் கிடந்த பாதை வழியாக நடந்தாள்... சந்திராவிடம் பிடிபடக் கூடாது என்ற வைராக்கியத்துடன், கண், மண் தெரியாமல் முதலில் ஓடினாள். மூச்சிரைத்த போது மட்டும் நின்றாள். பிறகு, அது முடிவது வரைக்கும், நடக்கப் போவது போல் நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/236&oldid=635681" இலிருந்து மீள்விக்கப்பட்டது