பக்கம்:பாலைப்புறா.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 239

வேக வேகமாய் போய்க் கொண்டிருந்த லாரிகளில் ஒரு தேசிய லாரி, அவள் பக்கத்தில் நின்றது. வாட்டசாட்டமான லாரி டிரைவர், அவளை உற்றுப்பார்த்தார். பைத்தியமோ என்பது போல் பகுத்தும் பார்த்தார். பிறகு, அப்படி இருந்தாலும் பரவாயில்லை. என்பது போல்தலையாட்டினார். லாரி தர்மப்படி, இருக்கைக்கு பக்கத்தில் வைத்திருந்த மல்லிகைப் பூச்சரத்தை எடுத்து, வண்டிக்கு வெளியே பக்கவாட்டில் உள்ள வட்டக் கண்ணாடியில் வைத்தார். இதைப் பார்த்தால், விஷயம் தெரிந்த பெண்கள்உடலுக்கு விலை பேச வந்து விடுவார்கள்...

கலைவாணி, அந்த லாரியைப் பார்க்கவில்லை. அது, ரோட்டையும் அவளையும் அடைத்து நின்றதும் தெரியவில்லை. ஆனாலும் டிரைவர் ஹாரன் அடித்தபோது நிமிர்ந்தாள். அந்த இருக்கையில் இருப்பவர் ஆணாகவோ, பெண்ணாகவோ அவளுக்கு படவில்லை. ஏதோ ஒரு மனிதஉருவம் ‘ஏன் இப்படி கையை நீட்டுகிறது? ஏன் இப்படி தலையை ஆட்டுகிறது? அந்த லாரியில் உட்கார்ந்து கொண்டே ஒடலாமோ... ஒடணும். கண்தெரியாத இடத்துக்கு ஒடனும். ஒடியே ஆகணும்.

கலைவாணி, கண்களைக் கசக்கியபடியே எழுந்தாள். லாரிக்காரன் நீட்டிய கரத்தை நோக்கி நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/239&oldid=635684" இலிருந்து மீள்விக்கப்பட்டது