பக்கம்:பாலைப்புறா.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திெரில் உட்கார்ந்திருந்த டாக்டர் சுமதியிடம், அசோகன் மீண்டும் வற்புறுத்தினான்...

‘என்னோட எய்ட்ஸ் வார்ட்... எப்படி இருக்குதுன்னுதான்பார்த்துட்டுப் போங்களேன்’

‘இன்னொரு தடவை வாறேன்... அசோக்.. நான் ரொம்ப பிஸி. ஜப்பான் போறதுக்கு இன்னும் விலா கிடைக்கல. இதுக்குள்ள ஆப்பிரிக்க மக்களை எப்படிகரையேற்றுவதுன்னு, பாரீஸ்ல ஒரு மாநாட்டுக்கு அழைப்பு வந்திருக்கு. அப்புறம் ‘லாஸ் ஏஞ்சல்ஸ்ல் ஒரு ஒர்க்ஷாப். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எப்படி மறுவாழ்வு கொடுப்பது என்பது சப்ஜெக்ட். இந்நேரம் ஆபீசிற்கு போனால், இன்னொரு அழைப்பு வந்திருக்கும். எதை கொள்ளுறது. எதை தள்ளுறதுன்னே புரியல. அப்புறம்... மூணு பசங்களை அனுப்பி வைத்தேனே. ரிசல்ட் வந்துட்டா?..’

“எஸ்... ஒன்று நெகட்டிவ்... இரண்டு பாஸிட்டிவ்’

‘யங்கர் ஜெனரஷன்... எப்படிக் கெட்டுப் போகுது பாருங்க...மனசே கேட்க மாட்டக்குது. ரிப்போர்ட் கிடைக்குமா...’

‘நாளைக்கு... நீங்க ஆகாயத்தில் பறக்காமல் இருந்தால்’

‘'நான் ஆகாயத்தில் பறக்கும்போதுகூட என்கால்கள் என்னமோ பூமியில்தான் நிற்கும்.’

‘கவித்துவமாய் பேசுறிங்க டாக்டர்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/240&oldid=635686" இலிருந்து மீள்விக்கப்பட்டது