பக்கம்:பாலைப்புறா.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 241

“தேங்க்யூ. டோன்ட் ஒர்ரி அசோக்... இப்போ பாரீஸ் டுர் போகும்போது... ஒங்களுக்கும், நான்கைந்து ஒர்க்ஷாப்புக்கு ஏற்பாடு செய்திட்டு வாறேன். நீங்க எனக்கு செய்கிற உதவியை நான் மறக்கல... அப்புறம் நீங்களும் ஆகாயத்தில் பறப்பீங்க... கால் தரையில பதியாமல் இருப்பீங்க.”

‘நீங்க... நினைக்கிற அனுமானங்கள் மூன்றும் தப்பு மேடம்... முதலாவதாய், நீங்களோ அல்லது வேறு யாருமோ... எனக்கு அசைண்மென்ட் வாங்கிக் கொடுத்து, நான்வெளிநாட்டுக்கு போகவிரும்பல. இரண்டாவது, நீங்க எனக்கு எதாவது செய்விங்கன்னு எதிர்பார்த்து, நீங்க அனுப்புற இளைஞர்களுக்கு நான் ஹெச்.ஐ.வி. டெஸ்ட் செய்யல... இவங்களுக்கு சேவை செய்ய, நீங்க ஒரு மீடியம். அவ்வளவுதான். மூன்றாவதாய், நான் தப்பித்தவறி ஆகாயத்துல பறந்தாலும், என் சிந்தனைஎல்லாம் என்எய்ட்ஸ் வார்ட் பக்கமே இருக்கும். ஏன்னா, இங்கே இருக்கிற டெர்மினல் ஸ்டேஜ் நோயாளிகள் கிட்டே... நான் தெரிஞ்சிக்கிட்டது ஏராளம். வெளிநாடு போவதாய் இருந்தாலும்... அங்கே ஒரு ஆசிரியராய்த்தான் போவேனே தவிர... மாணவனாய் இல்ல’

‘என்ன அசோக்... இப்படியா...கட் அண்ட் ரைட்டாய் பேசுறது. ... ‘”

“நம்ம நட்பு நீடிக்கிறதுக்காவது... சில விஷயங்களை தெளிவாக்கிடுறது நல்லது பாருங்க... இது வரைக்கும் இறக்கப் போகிற நிலையில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளை நீங்க பார்த்திருக்கீங்களா...’

‘ஜி.எச்.சுல... இலைமறைவு காய் மறைவாய் பார்த்திருக்கேன்.”

‘சரி... இப்போஎன்னோட வாங்க...”

‘'வேண்டாம்... அசோக்... எனக்கு அழுகை வந்திடும்’

“அழுகை வந்தால்... அழுதுட்டுப் போறது... அதனால என்ன’

‘நேரமாயிட்டேன்னு பார்க்கேன்”

‘வேற எதுக்கு செலவிடுற நேரத்தையும் விட... இதுக்கு செலவிடுகிற நேரம் புனிதமானது டாக்டர்... எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் நடத்துறீங்க... இது பற்றி ஊர் ஊராய் போறது மாதிரி... நாடு நாடாய்

போlங்க... ஒரு சாகப் போற நோயாளியையாவது... நேரிடையாய் பார்க்காமலா போகிறது? கமான்... லெட் அஸ் n’

டாக்டர் சுமதி, அசோகனைப் பார்த்து எரிச்சலோடு சிரித்தாள். ஆனாலும், இவனைப்பகைக்கக்கூடாது... சந்தேகத்திற்குரிய எல்லா எய்ட்ஸ் LIIT. 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/241&oldid=635687" இலிருந்து மீள்விக்கப்பட்டது