பக்கம்:பாலைப்புறா.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பாலைப்புறா

கேஸ்களையும், இவன்தான் டெஸ்ட் செய்கிறான்... இவள்,என்.ஆர்.ஐ. தமிழர்களைக் கூட இங்கே அனுப்பி இருக்கிறாள். அந்தத் தமிழர்கள்தான், இந்த சுமதிக்கு வெளிநாட்டு ஒர்க்ஷாப்புகளையும், பயிற்சி முகாம்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவளுக்கு, ஹெச்.ஐ.வி. ரத்தத்தைப் பார்க்கவே பயம்... இந்த கிராதகனை சகித்துத் தான் ஆகணும். சொந்தத்தில் லேப் வைத்தால், அதுவே முழு நேர வேலையாகி விடும்... தென்காசிக்கு லேப்புக்கு அனுப்பினால், அப்புறம் அந்த லேப்காரன்தான் வெளிநாடு போவான்...

நாலையும் யோசித்த டாக்டர் சுமதி, ஒரு ரெடிமேட் புன்னகையை iசியபடியே, ‘நான்... ரெடி’ என்றாள்.

அசோகனும் சுமதியும், அந்த மருத்துவமனைக்கு சற்றுத் தள்ளி உள்ள அவுட் ஹவுஸில் உள்ள எய்ட்ஸ் வார்டுக்குள்நுழைந்தார்கள். அங்கே கட்டில் கட்டிலாய் நெளிந்து கொண்டிருந்தவர்களின் கண்களை, அசோகன் பிரகாசப் படுத்தினான். டாக்டர் சுமதி ஆச்சரியப்படுத்தினாள். அந்த மரணக் கட்டத்திலும், ஒரு சில நோயாளிகள், அவளை அதிர்ந்து பார்த்தார்கள். அசோகனைவிட உயரமானவள்... ஐந்தாறு வயது அதிகமானவள்... அவளிடம் சிவப்பும் செஞ்சிவப்பும் பிச்சைஎடுக்க வேண்டும்... சுண்டினால் ரத்தம் வருவது போன்ற நிறம்.. ஆனாலும் இழவு வீட்டுக்கு, இப்படி கல்யாண வீட்டுக்கு வருவதுபோல் வரக் கூடாது... கைநிறைய தங்க வளையல்கள்... கழுத்தில் தங்கச்செயினில் தொங்கிய மூக்குக் கண்ணாடி... கண்ணைப் பறிக்கும் பட்டுச்சேலை... ஒரு முழ அகல ஜரிகை...

அசோகன், அந்தக் கட்டில்களில் கிடந்த நோயாளிகள் ஒவ்வொருவர் பக்கத்திலும் போய், பெயர் சொல்லிப் பேசினான். ஒருத்தி குப்புறக் கிடந்தாள்... தலைமட்டும் இல்லையானால் அவளை விறகாகக் கொள்ளலாம். ஈனமுணங்கலாய் இதயத்தைப் பிழிய வைக்கும் பார்வை... முப்பது வயதுக்குள்ளேயே முக்காலத்தையும் முடித்துக் கொள்ள போகிறவள்... இன்னொருவருக்கு உடலை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்; அந்த அளவுக்கு கட்டுக்கள். குணப்படும் தொழுநோய், இப்போது கோபப்பட்ட உடம்பாய் மல்லாக்க கிடந்தவர்கள். மரித்ததுபோல் உயிர்த்தவர்கள். கழுத்துக்கும் மூக்கிற்கும் இடையே மட்டுமே உயிர் வைத்திருந்தவர்கள்... இடைவிடாஇருமல்காரர்கள் மூளை பாதிக்கப்பட்டு, கால் செத்தும் கை செத்தும், உயிர் சாகக் காத்துக் கிடப்பவர்கள். கழுத்து வீங்கிப் போனவர்கள்... ஒரு கையின் அகலத்துக்குப் போன ஆறடி உடம்புக்காரர். நெருப்பாய் சிவந்த கால்களில், கறுப்புக் கறுப்பான அக்கிக் கட்டிகளை கொண்டவர்கள்... உடல் முழுக்க கொப்பளங்களைக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/242&oldid=635688" இலிருந்து மீள்விக்கப்பட்டது