பக்கம்:பாலைப்புறா.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 299

இல்லப்பா இது. பாரீன் நிரோத்... எதுக்கும் வச்சுக்கங்களேன்’

மனோகர், அதை கைநீட்டி வாங்கினான். உடனே அந்தப் பெண், தொங்கு பைக்குள் வைத்திருந்த ஒரு பார்ஸலை வெளியே எடுத்து, அதைப் பிரிக்கப் போனாள். அதற்குள், மனோகர், அந்த பிளாஸ்டிக் உறையை மூன்று தடவை தலையைச் சுற்றிவிட்டு, பிறகு தூ’ என்று துப்பியபடியே தூக்கி எறிந்தான்... கருணைததும்ப தோன்றிய, அந்தப் பெண், அந்தப் பார்ஸலை மீண்டும் பைக்குள் போட்டுக் கொண்டாள். இதற்குள், அர்த்தநாரி போல் ஆண்பாதி பெண்பாதியாய் ஆகிப் போன ஒருத்தன், தன்னம்பிக்கையோடு சொன்னான்.

‘எங்களுக்கு இப்போ.. பம்பாய்ல ஒரு சங்கம் இருக்குது. அங்கே இருந்து ஒரு பத்திரிகையும் வருது... அமெரிக்காவுல அங்கீகாரமும் கிடச்சிருக்குது... அவங்க, எங்களைப் பார்த்துக்குவாங்க... நீங்க போயிக்கினே இருங்க”

சமூக இயலில் பட்டமேற்படிப்பும், சமூகத் தொண்டில் டிப்ளமாவும் படித்துவிட்டு, இன்னும் சரியான வேலை கிடைக்காமல் திண்டாடும் அந்தப் பெண், தன்னை மறந்து, தன் படிப்பை மறந்து கத்தினாள்.

‘உடல் ஊனம் மாதிரி... இது... ஒங்களுக்கு ஒரு மன ஊனம். இது தெரியாமல், ஏதோ பத்மஸ்ரீ பட்டம் வாங்குன மாதிரி நினைக்காதீங்க... நீங்களும் கெட்டு. மற்றவங்களையும் கெடுக்கிறதை நினைத்துப் பாருங்க”

எல்லோரும், அவள் மீது ஆத்திரப்பட்டதுபோல், ‘ஏய், ஏய்’ என்று கத்தியபடியேதுள்ளிய போது, இதுவரை பேசாத ஒருத்தன், எல்லோரையும் கையாட்டி அடக்கினான். பிறகு, முகம் நட்டுவாங்கமாக, மரத்துப் போன குரலோடு உரத்துப் பேசினான்.

‘இவங்க பேச்சுக்கும், மனசுக்கும் சம்பந்தம் கிடையாது சிஸ்டர். ஆனாலும், உங்களை பார்த்தால் படித்தவங்க மாதிரி தெரியுது. இதனால ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கணும். நினைத்துப் பார்க்க முடியாத ஸ்டேஜூக்கு போயிட்டவங்க நாங்க. எங்களில் சிலர் தங்களை மறைச்சுட்டு... சமுதாயத்துல கெளரவமாய் நடமாடத்தான் செய்யுறாங்க... ஆனாலும், நாங்க.. பத்துப் பதினைந்து வயசுலேயே... பந்திகளுக்கு வளைந்து கொடுத்து நிமிராமல் போன தங்காங்க... நீங்க எங்களைப் பற்றி கவலைப்படாமல்... நான் சொல்ல போறதைப் பற்றி கவலைப்படுங்க. பார்க்கிலேயோ, பீச்சிலயோ, இல்ல சினிமாத் தியேட்டர்லயோ.. எங்கெல்லாம் ஒரு சின்னப் பையனோ, இல்லாட்டி விடலை பயலோ, ஏதாவது ஒரு பெரிசுகிட்டே ஒட்டிக்கிட்டுக் கிடந்தால், அவனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/299&oldid=635750" இலிருந்து மீள்விக்கப்பட்டது