பக்கம்:பாலைப்புறா.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பாலைப்புறா

வேலைபார்க்கேன்... டெய்லி தாம்பரத்துலஇருந்து வாறேன். கைதிறையச் சம்பளந்தான்... வீட்ல... கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிக்காங்க... நான்தட்டிக் கழிக்கேன். ஏன்னா, நான்காலேஜூல படிக்கும் போது... எங்க பக்கத்து வீட்டுப் பொண்ண சைட் அடிக்கப் போனால்... அவள் அண்ணன் கிட்டே மாட்டிக்கிட்டேன். தங்கைக்காக, அண்ணனுக்கு தியாகியானேன். கடைசியில... அந்தப் பொண்ணு பேய் மாதிரி தெரிந்தாள்... அந்த அண்ணன் எனக்கு கதாநாயகனாப் போயிட்டான்... இது எப்படி இருக்கு...?”

அந்தப் பெண்ணால், பேசாது இருக்க முடியவில்லை. ‘ஸார். இவங்களுக்கு சிகிச்சைகொடுக்க முடியாதா?”

‘அது அடுத்த கட்டம். இப்போ நம்ம பர்ப்பலே வேற. தம்பிகளா... நான்தான் சொன்னேனே.... ஒங்களைத்தப்பு கண்டுபிடிக்க வர்லன்னு...’

‘ஒஹோ... அது வேற செய்வியா...”

‘டேய்... சும்மா இருடா... ஒனக்கு என்ன சார்வேணும்’

‘நாங்க... வடபழனில... ஒரு அமைப்பு நடத்துறோம். ஒங்கள மாதிரி தம்பிகளுக்கு காண்டோம் கொடுக்கோம். இதனால் ஒங்களுக்கோ... ஒங்க கஸ்டமருக்கோ எய்ட்ஸோ... இல்ல எந்த நோயோ வராது பாருங்க”

‘போய்யா... எங்க பிழப்புல மண்ணள்ளிப் போடாதே... எங்க கஸ்டமர் லாம் ஹைகிளாஸ்... வக்கீலுங்க... என்ஜினியருங்க... டாக்டருங்க... கான்டோமக் கொடுத்தால், கன்னத்துல அரைவான்க’

‘கூட்டி வந்த ‘டபுள்டக்கர் கண்ணன், பக்குவமாய் பேசினான்.

‘ஒங்கள... மாதிரிதாண்டா... நானும் இவங்கள விரட்டுனேன். ஆனாலும், இவங்க நல்லவங்கடா... வர்றீங்களா... இவங்க ஆபீசுக்குப் போகலாம். இவங்க டைரக்டர் நல்ல மனுஷன்’

‘டேய் மரியாதியாய் போய்கினே இரு... ஒன்னை மாதிரி பகல் முழுசும் கக்கூஸ் கழுவிட்டு. நைட்ல... இந்த வேலய நாங்க திமிர்ல செய்யல. திரும்பிப் பாராமல் போய்க்கினே இரு’

அந்த நடுத்தர வயதுக்காரர், பைக்குள் இருந்த ஒரு பிளாஸ்டிக் உறையை எடுத்தார். அதன் உள்ளே, கண்ணைப் பறிக்கும் நிறத்தில்... ஒரு வட்ட உருவம் பாம்பு மாதிரி சுருண்டு கிடந்தது... எல்லோரும் ஆச்சரிய மாய்

அதைப் பார்த்தபோது, அவர், அதுதான் சமயம் என்று விளக்கினார்...

நம்ம நாட்ல. சின்னப் பசங்க... பலுன்மாதிரி... ஊதுற காண்டோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/298&oldid=635749" இலிருந்து மீள்விக்கப்பட்டது