பக்கம்:பாலைப்புறா.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 297

‘ஏண்டா...துரோகி... எட்டப்பா... எச்சிக்கல... எதுக்குடா... இவங்கள கூட்டி வந்தே... ஸ்டார் ஹோட்டலுக்கு போகிற திமிராடி...உனக்கும் எங்கள மாதிரி இந்தப் பார்க்குல பொத்துன்னு விழுறதுக்கு எத்தன நாளாகும்.... போடா... கூட்டிட்டுப் போடா’

கண்ணன், ஏதோ பேசப் போனபோது, எல்லோரும் கோரலாக, ‘ஏய், ஏய்’ என்றார்கள். அவனைப் பேசவிடாமல், கை தட்டினார்கள். மனோகர்தான், ஒவ்வொருவரையும் இழுத்து, அவர்களது வாய்களை கைகளால் மூடினான். பிரிந்த உதடுகளைஒட்டவைத்தான். இதற்குள்நடுத்தர வயதுக்காரர்.அவர்கள்பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.

‘'நான்... அந்த மாதிரி இல்ல தம்பிகளா...

‘அப்போ... எதுக்கு வந்தீங்க...’

“இங்கே ஒங்களுக்கு என்ன வேலை”

அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

‘'வேலை இருக்கிறதாலதான் வந்தோம். நீங்க ஹோமா செக்ஸுவல் அதாவது ஒரினச்சேர்க்கைகாரங்கதானே?”

‘'நாங்க ஹோமா செக்ஸ்... ஒரினமோ... ஈரினமோ தெரியாது; அதுக்கு என்ன இப்போ?”

‘பெரிசா... ஒண்ணுமில்ல... நீங்க செய்யுறதை தப்புன்னோ, சரின்னோ நான் சொல்ல வர்ல... ஆனால் முன்னெச்சரிக்கை இல்லாத ஒங்க செய்கையால.. எத்தனபேரு எய்ட்ஸால் பாதிக்கப்படுறாங்க என்கிறதை நெனைச்சுப் பார்த்தீங்களா தம்பிகளா...’

‘நீ சும்மா இருடா.. நான் பேசுறேன்... நாங்க எதுக்கு நெனைத்துப் பார்க்கணும்? நானு. பள்ளிக்கூடத்தில் படிக்கப் போ... அதுவும் பத்தாப்பு படிக்கப்போ... இதே இந்த பார்க்குலதான்பரீட்சைக்குப் படிக்கவந்தேன். ஒரு தடிப்பயல்... என்ன புத்தகம் தம்பின்னு கேட்டான். வாங்கிப் பார்த்தான்... ஐலா பேசி நைஸா... ஹோட்டலுக்கு கூட்டிப் போனானான். காய்ஞ்சமாடு கம்பம்புல்லுல விழுந்தது மாதிரி நானும் பிரியாணி புரோட்டாவுல விழுந்தேன். அப்பால, சினிமாவுக்கு கூட்டிப் போனான்... அப்புறம்... போகட்டும்... என்னை... அந்தப் பாவி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தப்போ... நீ எங்கே போனே மச்சி...”

‘இவன விடுங்க. நான் சொல்றேன்... இப்பவும் ஒரு ஆபீஸ்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/297&oldid=635748" இலிருந்து மீள்விக்கப்பட்டது