பக்கம்:பாலைப்புறா.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பாலைப்புறா

மாணவர்களாய்த் தெரியும். உள்ளே போய் உற்றுப் பார்த்தால், அவர்கள் புற்றாய்ப் போனவர்கள் என்று தெரியலாம்.

நான்கு பக்கமும் சாலைகள் சூழ்ந்த நடுப்பகுதியில் உள்ள இந்த சென்னைப் பெருநகரின் பூங்காவில் வட்ட வட்டமாய் வெட்டிவிடப்பட்ட செடிகளுக்கு மத்தியில், தேய்த்து தேய்த்து தேய்ந்து போன புல்தரையில், அசோக மரக்குவியல்களின் வேர்களில், அவர்கள் வேரற்றுக் கிடந்தார்கள். அந்தக் கூட்டத்தில், மனோகரும் பாடினான். தனியாகவும் பாடினான். கூட்டாகவும் பாடினான்.

பட்டபாட்டை மறப்பதற்காகவோ என்னவோ, பல்வேறு விதமாய்ப் பாடியவர்கள், இப்போது மனோகர்பாட்டுக்கு காது கொடுத்தார்கள். உடனே, அவன் பாட்டையே மாற்றினான்.

‘'நான் பாடும் பாடு நாய் படும்பாடு... ஏன் பட வைத்தாயோ இறைவா...! என்னை ஏன் பட வைத்தாயோ...’

மனோகரின் ஆனந்தப்பாட்டு, அளப்பரிய துயரப்பாட்டாய் மாறியபோது, திடீர் என்று மூன்று பேர் முன்னால் வந்து முளைத்தார்கள். ஒருத்தன், அவர்களின் முன்னாள் கூட்டாளி. அப்போது வாடிப் போன உடம்பில், இப்போது ஒரு சில இடங்கள் துளிர்த்திருந்தன. வெளிப்பூச்சு மாதிரியான மினுக்கம், இன்னொருத்தர் நடுத்தர வயதுக்காரர். அருமையான முகவெட்டு. அதற்கேற்ற கோணாத உடல்வாகு... இன்னொருத்திக்கு முப்பது வயதிருக்க லாம். வெள்ளை மாவில் அள்ளிப்பிடித்தது போன்ற உருவம். பப்பாளி விதை மாதிரி சிறிய கண்காரி. அவள் மட்டும் வராது இருந்தால், ‘யார் வரணும். எங்கே வரணும்...? என்று கோரசாக கேட்டிருப்பார்கள். அப்படியும் மனோகர்கேட்டான்...

‘யாரு சார்... வேணும்...? டபுள் டக்கரா. தங்காவா... பந்தியா...?”

அந்த ஆணும் பெண்ணும் புரியாது விழித்தபோது, கூட வந்தவன் இந்த டெக்னிக்கல் சொற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

‘டபுள் டக்கர்... என்றால், மலராகவும் இருப்பான், வண்டாகவும் இருப்பான். தங்கா என்றால் வெறும் மலர்... பந்தி என்கிறவன் வண்டு... எங்களோட தொழில் புரியுதா...? விளக்கணுமா...’

அந்த மனிதர், ‘புரியுது” என்று சொன்னபோது, அந்த பெண் ‘போதும்’ என்று முகம் சுழித்து, காதுகளை கையோடு சேர்த்துப் பொத்திக் கொண்டாள்.

தொழில் ரகசியத்தை உடைத்துப் போட்ட அந்த அப்ரூவர் கண்ணனை, கீழே கிடந்த விட்டம் பெருத்த ஒருவன் விரட்டினான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/296&oldid=635747" இலிருந்து மீள்விக்கப்பட்டது