பக்கம்:பாலைப்புறா.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295


விதவிதமான, வித்தியாசமான, மானுட விதி விலக்குகளின் புகலிடம். மனித மூலப் பொருளை திரிபுகளாக்கும் உலைக்களம்; மலராகவும், வண் டாகவும் ஒரேசமயத்தில் ஒன்றிப்போன சோகவனம், மானுடத்தில் இருந்து, பிய்ந்தோ அல்லது பிய்க்கப்பட்டோவிழுந்த பச்சோல்ைகள்... காயாகாமலே பழுத்துப் போன பிஞ்சுகள், பழுத்துப் போனதாய் நினைத்துப் புழுத்துப் போனவர்கள்; அத்தனைபேரும் இருபத்தைந்துக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொரு முகத்திலும் ஒரு பெண் சாயல்; இயற்கையிலேயே அலிகளாய் பிறக்காமல் அப்படி ஆகிப் போனவர்கள்அல்லது ஆக்கப்பட்டவர்கள்; பீடா, பிரியாணி போன்றவற்றைத் தின்று தின்று, ‘பெரிசுகளால் தின்னப் பட்டவர்கள். துவக்கத்தில் தன்னை நினைத்து நினைத்து, இப்போது அந்த தன்னையே தொலைத்து விட்டவர்கள்.

ஆனாலும், அவர்கள் ஆனந்தமாகவே பாடினார்கள், அடிபெருத்து நுனி சிறுத்த ஒரு பொம்மைச் சொக்காக்காரன், ஏழு கோணலாய் உடல் மடித்துக் கிடந்த ஒருத்தனின் இடுப்பில் தலைபோட்டு, ஒரு இந்திப் பாட்டைப் பாடினான். இன்னொரு கள்ளிப்பால் வடியும் முகக்காரன், உட்கார்ந்தபடியே, இடுப்பு மேல்பகுதியை அங்குமிங்குமாய் அபிநயமாய் ஆட்டிக்காட்டினான். இன்னொருத்தன், இன்னுமொரு இன்னொருத்தனின் வாயில் முத்தமிட்டு, அந்த வாயைச்சொல்லத்தகாத வார்த்தைகளால் விமர்சித்தான். ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு பாட்டு. சிலர் வாய்களில் இந்தியும், தமிழும் கலந்த கலவைப்பாட்டு; பாட்டுக்களுக்கு, முகங்கள் அபிநயமாயின. தொடைகள் மிருதங்கமாயின, கரங்கள் கம்புகளாயின. இரைச்சலே இசையானது. வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு, அவர்கள் வேடிக்கையான கல்லூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/295&oldid=635746" இலிருந்து மீள்விக்கப்பட்டது