பக்கம்:பாலைப்புறா.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பாலைப்புறா

உள்ளே வந்தார்கள். கலைவாணி கேட்டாள்.

‘இந்தப் பணத்தை வச்சி என்ன செய்யலாம்...?” ‘இது ஒன்னோட பணம்மா...பேங்க்லே டிபாசிட் செய்...” ‘என்ன டாக்டரய்யா... ஏன் என்னைப் பிரிச்சிப் பேசlங்க...? நம்ம. பணமுன்னு சொல்லப்படாதோ... இந்த அமைப்புக்கு எப்படிச் செல வழிக்கிறதுன்னுதான் கேட்டேன்’

சந்திரா, குறுக்கிட்டாள். ‘அப்படில்லம்மா... உனக்கும் ஒன்னை நம்பி பணம் இருக்கணும். எனக்குன்னு ஒரு கிளினிக் இருக்குது. சஸ்பெண்டானது நல்லதாப் போயிற்று... கிளினிக், பணத்தைக் கொட்டுது... அது என்னோட சொத்து... அசோக்கிற்கு, மருத்துவமனை இருக்குது. அது அவரோட சொத்து... இது மாதிரி, இது ஒன்னோட சொத்து... தாய் பிள்ளையாய் இருந்தாலும், வாய் வயிறு வேறம்மா...’

‘அதுவே எய்ட்ஸ் பிள்ளையாய் இருந்தாலுமா... நல்லாக் கேளுங்க. இந்தப் பணம் இந்த அமைப்புக்குத்தான். இதுல நான்மாறமாட்டேன்...’

‘சொன்னாக் கேளும்மா...’ ‘அவளை, அவள் வழியிலே விட்டுடு சந்திரா... எனக்கும் ஒனக்கும் பணம் தேவை. ஏன்னா, நீயும் நானும் கல்யாணம் செய்துக்குவோம். சாரி... வெரி வெரிசாரி... நீயும் நானும் தனித்தனியாய் திருமணம் செய்துக்கலாம். அப்போது நமக்கு குழந்தை குட்டின்னு’

‘தத்துப் பித்துன்னு உளறாதீங்க... அசோக்...”

‘'சாரி... நமக்கு, தனித்தனியா குழந்தை பிறக்கலாம்’

கலைவாணி, கலகலப்பாய்ச் சிரித்தாள். எதையேக் கண்டுபிடித்தவள் போல் கைதட்டிச்சொன்னாள்.

‘டாக்டரம்மா, ஒங்க அசோக்கோடஐடியா நல்ல ஐடியா...’

‘அது என்ன ஒங்க அசோக்’ “ஆமாம்... அசோக் ஒங்களுக்கு... டாக்டர் அசோகன் எனக்கு... புரியுதா...?”

சந்திராவிற்குப் புரிந்தது. ஆனாலும் நாணப்பட முடியவில்லை. கலைவாணி தலையில் செல்லமாகக் குட்ட முடியவில்லை. அவள் மனதுக்குள், தாய்மாமா மகன் சங்கரன் விஸ்வரூபம் எடுத்தான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/294&oldid=635745" இலிருந்து மீள்விக்கப்பட்டது