பக்கம்:பாலைப்புறா.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 293

‘இந்த இடத்தில பேசுற பேச்சில்லைம்மா... எனக்குத் தெரியாதா?”

‘எனக்கு, என்னமோ சார்... நீங்க அவளைப் பழிவாங்குறதாக்குப் பதிலாய் கோர்ட்டுக்கு போகலாமுன்னு தோணுது... ஏன்னா ஹெச்.ஐ.வி., ஒருத்தருக்கு வந்தால், அதை அவர்கிட்ட மட்டுமே சொல்லணுமுன்னு ஒரு அரசு விதி வந்திருக்கு... ஆனால் சுமதி போன்ற எய்ட்ஸ் வியாபாரிகள், இதைப் பயன்படுத்தி தப்பிக்கலாம். அதனால கோர்ட்டுலே இந்த முறையை கேள்வி கேட்கிறதே நல்லது... அமெரிக்காவிலே கூட, ஒரு ஒரினச்சேர்க்கை ஆசாமி. தன் கூட்டாளிக்கு இருந்த ஹெச்.ஐ.வி. பற்றி தெரிந்த டாக்டர், தன்கிட்ட சொல்லாததால், தனக்கும் எய்ட்ஸ் வந்துட்டதாய், அந்த டாக்டர் மேலே கோர்ட்டுலே வழக்குப் போட்டிருக்கான். இன்னும் வழக்கு நடக்கு...’

சபாரிக்காரர் குறுக்கிட்டார்...

‘இந்த இடத்தில, நல்லவங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். நல்ல காரியங்களை மட்டுமே செய்வோம்... அப்புறம்... தப்பாய் எடுக்கப்படாது. கலைவாணி விழிப்புணர்வோ ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு ஏற்பாடு செய்கிறதாய் கேள்விப்பட்டேன். என் சார்பில் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கணும். எல்லோருக்கும் பிச்சை போடுற மாதிரிதான் பணம் கொடுத்திருக்கிறேன். ஆனால் இந்தப் பணத்தை என் இன்னொரு மகளுக்கு...’

சபாரிக்காரரால், பேச முடியவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து நின்றார். மூன்று நிமிடம் கழித்து உட்கார்ந்து, செக்கை நீட்டினார். கலைவாணி அதை வாங்கிக் கொள்ளாமல், அசோகனைப் பார்த்தாள். அவன் யோசனை தேவை இல்லை என்பது போல் சொன்னான்.

‘iர வசனம் பேசாமல், வாங்கிக்கோ கலைம்மா’

அந்தம்மா, கலைவாணியைக் கண்களால் கெஞ்சினாள். சாந்தி, கவைாணியின் கையைப் பிடித்து, விரல்களை ஒவ்வொன்றாய் நீட்டிவிட்டு, அதை உள்ளங்கையாக்கி செக்கை எடுத்து அதில் வைத்தாள். பிறகு அவளைக் கட்டிப் பிடித்து இன்னொரு முத்தம்,

அரைமணி நேரம் வரை, பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு, வந்தவர்கள் புறப்பட்டார்கள். முரண்டு பிடித்த சாந்தியை, கலைவாணிதான் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தாள். அடிக்கடி கடிதம் போட வேண்டும், டெலிபோனில் பேச வேண்டும் என்ற நிபந்தனையோடு சாந்தியும், காருக்குள் ஏறினாள்.

அவர்கள் போனதும், கலைவாணியும் சந்திராவும் அசோகனுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/293&oldid=635744" இலிருந்து மீள்விக்கப்பட்டது