பக்கம்:பாலைப்புறா.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பாலைப்புறா

இன்ஸ்பெக்டர் செலக்ஷன்லே பிஸிக்கல் டெஸ்ட்டுலே இவன் வாங்கின சைபருக்கு முன்னால... ஒரு ஏழு என்கிறதை போட வைத்தவன் நாள்... இப்போ கோவைக்கு டிரான்ஸ்பர் கேட்கான். கிட்டத்தட்ட முடிச்சிட்டேன். எங்களை மாதிரி தொழிலதிபர்களுக்கும், குலைக்கிறதுக்கு யூனிபார்ம் போட்டவனும் தேவையாய் இருக்குதே...’

அசோகன் லேசாய் முகம் சுழித்தான். அவன் ஏதோ, ஏடாகூடமாய் கேட்கப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட சந்திரா, வெளிப்படை யாகப் பேசவழியில்லாததால், அவன் உள்ளங்கையைக் கிள்ளினாள். பிறகு, அசோகனை முந்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வேண்டுகோள் விடுத்தாள்.

‘உள்ளே வந்து உட்கார்ந்துட்டுப் போகலாமே சார்! வாங்கம்மா... வாட் இஸ் யுவர் நேம்...’

‘'சாந்தி... கலைவாணி ஸிஸ்டரால பெயருக்கு உள்ளது நிலைச்சுட்டுது...’

‘நல்லா பேசுறியே... பேசுறீங்களே’

‘என் மகள்... பேசணுமுன்னு பேசலம்மா... உணர்ச்சிப்பெருக்கில்... அதுவும் நன்றிப் பெருக்கில் எல்லோருக்கும் உண்மைதான்... வரும்... அந்த உண்மையும் எதுகை மோனையோட வரும்...’

அசோகன்கூட, அவரை இப்போது வியந்து பார்த்தான். அவர் மகளுக்கு, ஆலோசனையும் வழங்கினான்...

‘இனிமேல், எவனையும் ஹெச்.ஐ.வி. டெஸ்ட் செய்துக்காமல் கல்யாணம் செய்துக்காதே பாப்பா... ஏன்னா, உங்க வர்க்கத்தில் இது சகஜம். எங்க டாக்டர்வர்க்கமும் இதுக்கு உடந்தையாய் நிற்கும்...”

‘நோ...அங்கிள், இனிமேல் நான்கல்யாணமே செய்துக்கிறதாய் இல்லே. டாடி டாடி... இங்கயே இருந்து டுறேன்... டாடி ஒங்க சர்க்கிள் எனக்கு வேண்டாம் டாடி’

சாந்தி, அப்படிச் சொல்லிவிட்டு, கலைவாணிக்கு முத்தமிட்டாள். அவள்கையை எடுத்து, தன்கையோடு கோர்த்துக் கொண்டாள்.

சபாரிக்காரர், குடும்பச் சகிதமாய் உட்கார்ந்தார். அசோகனும் வெளியே இருந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து, உட்கார்ந்தான். சந்திராவும் கலைவாணியும் நின்றார்கள். அந்தம்மா, முதல் தடவையாய்ப் பேசினாள்,

‘யாரு... அவள்... சுமதியா... என்னங்க நீங்க அவளை ஏதாவது

செய்யனும்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/292&oldid=635743" இலிருந்து மீள்விக்கப்பட்டது