பக்கம்:பாலைப்புறா.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 291

‘என்ன சட்டம்... ? பொல்லாத சட்டம்... இன்ஸ்பெக்டர் வைக்கிறதுதான் சட்டம், என்னப்பா சொல்றே...? நீ இங்கே எதுக்காக வந்தே...?”

‘ஒரு சின்ன விசாரணையாய்...’

‘சின்ன விசாரணை இல்ல சார். இவரு டாக்டர் அசோகனை... சுமதியோடது.ாண்டுதலுல...’

‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல சார். எங்க தொழிலப்பற்றி ஒங்களுக்கு தெரியாதா... என்விசாரணையோட இன்னொரு நோக்கம், இந்த சுமதியைப் பற்றி தெரிஞ்சிக்க நினைச்சதுதான். நான் கடுமையா பேசுறது ஒரு நடிப்புத்தானே...’

‘இனிமேல் இந்தப் பக்கம் தலைகாட்டப்படாது. அப்புறம் குற்றாலத்தில் கவர்ன்மென்ட் கெஸ்ட் ஹவுஸ்லதான் இருக்கேன். எப்போ வாறே?”

‘இப்பவே... வாறேன் சார்...’

‘'வேண்டாம்... என் மகள் கலைவாணிக்கிட்டே கொஞ்சம் பேசணும். பேச முடியாட்டியும், அவளைப் பார்த்துட்டே நிற்கணும்... ஸ்டேஷன் பக்கமாய் நில்லு... ஒன் விஷயம் முடிஞ்சது மாதிரிதான்’

“தேங்க்யூசார். அப்போநான். ஸ்டேஷன் பக்கமா நிற்கிறேன். சார்’

இன்ஸ்பெக்டர் சிங்காரம், கால்களைத் தேய்த்தபடியே நடந்தார். அவருக்கு, தனது காட்பாதரிடம், இங்கே நிற்பவர்கள் தன்னைப் பற்றி ஏடாகூடமாய் பேசிவிடப்படாதே... என்ற பயம்... என்றாலும், அசோகன் மீது ஏற்பட்ட கோபத்தை, சுமதி மீது திருப்பிக் கொண்டே, இன்ஸ்பெக்டர் புறப்பட்டார். கான்ஸ்டபிள்களோ, தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று அசோகனிடம் சொல்வதற்காக, ஒரு மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீரைக் குடிக்கும் சாக்கில்நின்றார்கள். ஆனாலும், இன்ஸ்பெக்டர் அந்த குடம் தீர்ந்து போவது வரைக்கும், அவர்களுக்காக வெளியே காத்து நின்றார்.

காவல்துறையினர் போனதும், அசோகன் சபாரிக்காரரிடம் கேட்டே விட்டான்.

‘'சார். தப்பாய் நினைக்கப்படாது; பெரியவங்க... காலுல தொங்கிக் கிட்டே சின்னவுங்க தலையில் மிதிக்கிறவங்களைப் பற்றி என்ன நினைக்கறீங்க...?’

‘சிபாரிசுலே வேலைக்கு வருகிறவன் எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க. இந்த சிங்காரம் எங்க ஊர்ப்பயல்... எங்க சாதிச்காரன். சப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/291&oldid=635742" இலிருந்து மீள்விக்கப்பட்டது